ஹவுஸ்மெட்ஸைவைத்து பாலாவை அசிங்கப்படுத்திய ஆண்டவர்.. சைடு கேப்பில் வாரிய ஆஜித்.. ரம்யா செம ஃபார்ம்!
சென்னை: மணிக்கூண்டு டாஸ்க்கில் சொதப்போ சொதப்பு என சொதப்பிய பாலாஜிக்கு ஹவுஸ்மெட்ஸை அட்வைஸ் செய்ய சொல்லி அசிங்கப்படுத்திவிட்டார் நடிகர் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் ரூல்ஸை பிரேக் பண்ணுவதையே தொடர்ந்து செய்து வருகிறார்.
ஒவ்வொரு டாஸ்க்கிலும் இரு தொடருகிறது. பாலாஜியின் செய்கையால் மொத்த ஹவுஸ்மெட்ஸின் உழைப்பும் வீணாகிறது.

வியாக்கியானம் பேசிய பாலா
கடந்த வாரம் கொடுக்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க்கில் தன் இஷ்டத்துக்கு ஒரு கணக்கை போட்டு கண்மூடித்தனமாக விளையாடினார் பாலாஜி. நாம செட் பண்றதுதான் டைம் என்றும் வியாக்கியானம் பேசினார்.

அசிங்கப்படுத்திய கமல்
இதனால் அவரது டீம் மெட்ஸ் மட்டுமின்றி மொத்த ஹவுஸ்மெட்ஸும் கடுப்பாயினர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாலாஜி ரூல்ஸ் பிரேக் பண்ணுவது குறித்தும், கேமை கெடுப்பது குறித்தும் பேசிய கமல், ஹவுஸ்மெட்ஸ்களை வைத்து அட்வைஸ் செய்ய சொல்லி அசிங்கப்படுத்தி விட்டார்.

ஆஜித் அட்வைஸ்
ஹவுஸ்மெட்ஸிடம் பாலாஜி விளையாட்டை எப்படி இம்ப்ரூவ் பண்றது என உங்களின் அட்வைஸை கொடுங்கள் என்றார் கமல். அதற்கு பதில் கூறிய வீட்டின் கேப்டனான ஆஜித், ரொம்ப யோசிக்காம சாதாரணமா விளையாடினாலே போதும். அவுட் ஆப் தி பாக்ஸ் யோசிக்கணும் என்ற அவசியம் இல்லை என்றார்.

இதுதான் கேப்டன் குரல்
இதனைக் கேட்ட கமல் இதுதான் கேப்டன் குரல் என ஆஜித்தை பாராட்டினார். தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், ஒரு நிமிஷ, 2 நிமிஷ டாஸ்க்கையெல்லாம் சிறப்பாக செய்து விடுகிறார். இதுபோன்ற லேட் டாஸ்கை செய்யதான் பாலாஜிக்கு பொறுமையில்லை என்று கூறி தனது அட்வைஸை கொடுத்தார்.

உங்க பாஷையில் டிப்ஸ்
தொடர்ந்து பேசிய ரம்யா பாண்டியன், உங்க பாஷையில சொல்லணும்னா டிப்ஸ் என்று கமலுக்கு ஞாபகப்படுத்திவிட்டு தொடங்கினா. மேலும் அவுட் ஆஃப் தி பாக்ஸ் போகாம விளையாடினாலே போதும், மத்த டாஸ்க்லாம் நல்லா விளையாடுறார் ஜென்ரலாக சொல்கிறேன் என கூறி தன் பங்கை முடித்தார்.


Click it and Unblock the Notifications











