டாடா கூட சொல்லவிடாமல் வெளியேற்றப்பட்ட ஜித்தன் ரமேஷ்.. அர்ச்சனாவுக்கு இதுதான் வருத்தமாம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருடைய வெளியயேற்றம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
இதில் முதல் நபராய், நேற்றே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஜித்தன் ரமேஷ்.

கட்டிப்பிடிக்க முடியவில்லை
கடைசியாக சக ஹவுஸ்மேட்ஸ்களை கூட சந்திக்க விடாமல் கன்ஃபெஷன் ரூமில் இருந்து ரமேஷை நேரடியாக வெளியேற்றினர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் ரமேஷை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஃபேவரிட்டிஸம்..
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார் கமல். அப்போது பேசிய அனிதா, அவர் வெளியே போவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கால் டாஸ்க்கின் போது அவர் ஃபேவரிட்டிஸம் காட்டினார்.

ஆச்சரியம் இல்லை..
இதனால் மக்கள் நிச்சயம் அவர் மீது கோபத்தில் இருந்திருப்பார்கள் என்று தோன்றியது. அதோடு அவர் கூட்டமாக விளையாடியதால் மற்றவர்களின் நிழல் அவருடைய தனித்தன்மையை மறைத்துவிட்டது. ஆகையால் அவர் வெளியே சென்றதில் ஆச்சரியம் இல்லை என்றார்.

அதுதான் வருத்தம்
அவரை தொடர்ந்து பேசிய ஆஜித் ஜித்தன் ரமேஷ் வெளியேறுவார் என்பது எதிர்பார்த்ததுதான் என்றார். பின்னர் பேசிய அர்ச்சனா அவர் போன விதம்தான் எதிர்பாராதது. அவர் போவார் என்று நினைத்தேன். மற்ற அனைவரையுமே

வேற ஒருத்தர்
தொடர்ந்து பேசிய ரியோ, ஜித்தன் ரமேஷ் வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். மேலும் இங்கு நடந்த ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு வேற ஒருத்தர் போவார் என்றுதான் எதிர்பார்த்து இருந்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications











