இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா? சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர் குரூப்!

சென்னை: நடிகர் ஆரி மற்றும் அனிதா சம்பத்தை ஹவுஸ்மேட்கள் வீட்டிலேயே சுவாரஸ்யம் குறைவானவர்கள் என டார்கெட் பண்ணி கண்ணாடி சிறைக்குள் அடைத்தனர்.

நேற்று எபிசோடில் இது பற்றி பேசிய கமல், ஆரி இந்த வாரமும் கண்ணாடி அறை வாய்த்ததா? என கேட்டவுடன், வாய்க்கப்பட்டது என ஆரி நச் பதில் கொடுத்து அர்ச்சனா அண்ட் கோவின் ஃபேஸை மாற்றினார்.

ஆரியை விட போரிங் போட்டியாளர் இந்த வீட்டில் இல்லையா என கமல் சாட்டையை சுழற்ற, ஆஜீத், கேபி, வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், சோமசேகர் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் பம்மினர்.

கண்ணாடி சிறை

கண்ணாடி சிறை

ஆரி, இந்த வாரமும் கண்ணாடி சிறை வாய்த்ததா? என கமல் கேட்க, வாய்க்கப்பட்டது சார் என நடிகர் ஆரி நச் பதிலடி கொடுத்ததும், போரிங் போட்டியாளர் என எப்படி அவரை தேர்வு செய்தீர்கள் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் பார்த்து கமல் கேள்வி எழுப்பினார். போரிங்னு சொல்றதுக்கு ஏகப்பட்ட பேர் பேசிய நிலையில், ரம்யா மட்டுமே அதற்கான விளக்கத்தை கொடுக்க முன் வந்தார்.

போரிங் இல்லை

போரிங் இல்லை

அவரும் அதில், சுவாரஸ்யம் குறைவு மற்றும் ஈடுபாடு குறைவு என இரண்டாவது ஒன்றை அண்டர்லைன் பண்ணி பம்மி பதுங்கி பேசிய ரம்யா பாண்டியன், ஆரியை ஏன் தேர்வு செய்தோம் என்கிற விளக்கத்தை முன் வைத்தார். தங்கமே டாஸ்க்கில் என் தங்கத்தை யார் வேணா எடுத்துக்கோங்க என தூங்கி விட்டார். அதனால், அவரை அப்படி அறிவித்தோம் என்கிற வாதத்தை அது ஸ்ட்ராட்டஜி என பேசி கமல் ஏற்க மறுத்து விட்டார்.

ஆரி மட்டும் தான் போரிங்கா?

ஆரி மட்டும் தான் போரிங்கா?

4வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் 16 போட்டியாளர்களில் நடிகர் ஆரி மட்டும் தான் போரிங் போட்டியாளரா? மற்ற யாரும் கிடையாதா? என மக்களின் மனசாட்சியாக கமல் கேட்க, சுரேஷ் சக்கரவர்த்தி உடனே ஏகப்பட்ட மிக்சர் குரூப் இருக்குன்னு முணுமுணுக்கத் தொடங்கினார்.

ஆஜீத் நீங்க ஓட்டு போடலையா

ஆஜீத் நீங்க ஓட்டு போடலையா

அர்ச்சனா அக்கா உடனே, ஹவுஸ்மேட்களோட அதிக அளவிலான ஓட்டுக்களை வச்சே ஆரியை தேர்வு செய்தோம் என்றார். நீங்களே ஒரு பெரிய குரூப்ப வச்சிக்கிட்டு இருந்தா எப்படிம்மா, என்பது போல நினைத்த கமல், ஆஜீத் நீங்க ஓட்டுப் போடலையா என கேள்வி எழுப்ப, அதை எப்படி நான் சொல்றது, நானே போரிங் தானே என நினைத்த ஆஜீத் பம்ம, ஆஜீத்தை மறைமுகமாக கலாய்த்தார்.

மிக்சர் குரூப்

மிக்சர் குரூப்

ஆரியை விட போரிங் போட்டியாளர் இந்த வீட்டில் இல்லையா என கமல் சாட்டையை சுழற்ற, ஆஜீத், கேபி, வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், சோமசேகர், சுரேஷ் தாத்தா என ஏகப்பட்ட பேர் பம்மினர். ஆரி மற்றும் அனிதா பண்ண அளவுக்கு கூட பர்ஃபார்மன்ஸ் பண்ணாதவர்களை கண்ணாடி சிறையில் அடைத்தது தவறு என்பதை சோமசேகரை சுவாரஸ்யமானவர் என தேர்வு செய்ததை வைத்து மீண்டும் உறுதி படுத்தினார்.

முறைத்த அர்ச்சனா

முறைத்த அர்ச்சனா

அப்படியே சோமசேகர் பக்கம் வந்த கமல், அவருக்கு எப்படி பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு கொடுத்தீங்கன்னு கேள்வி எழுப்ப, அர்ச்சனா அக்கா மட்டுமே கை தூக்கி, பின்னர் காண்டாகி, அன்னைக்கு நிறைய பேர் தூக்குனீங்களே, இப்போ கம்முன்னு இருக்கீங்களே என முறைக்க ஆரம்பித்து விட்டார்.

கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

சோமசேகரை சுவாரஸ்யமும் அதிக ஈடுபாடும் கொண்டவர் என எப்படி தேர்வு செய்தார்கள் என்பதிலேயே ஹவுஸ்மேட்களிடம் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. நிஷாக்குத் தான் ஓட்டுப் போட்டேன் என சுரேஷ், பாலாஜி, ஜித்தன் எல்லாம் வேறு கதை பேச ஆரம்பித்த நிலையில், கூச்சலும் குழப்பமுமே நிலவியது.

மெல்லிய அரசியல்

மெல்லிய அரசியல்

இந்த குழப்பத்துல தான் தேர்வு செஞ்சீங்களா என கேட்டு கமல் மொத்த பேரையும் பங்கம் பண்ணார். சனம் ஷெட்டி, உடனே வீட்டில் ஃபேவரிசம் இருக்கு சார், எனக் கூற, நான் அதை கேட்கல, அதையும் தாண்டி ஒரு மெல்லிய அரசியல் இருக்குற மாதிரி இருக்கு, இருக்கா எனக் கேட்ட உடனே ஆரி ஆமாம் சார் இருக்கு என பேச ஆரம்பித்தார்.

காப்பாத்துறாங்க

காப்பாத்துறாங்க

தங்களுக்கு பிடித்தமானவர்களை தலைவர் ஆக்கிவிட்டு, அடுத்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க வைத்து காப்பாத்துறாங்க சார், அந்த அரசியலை அர்ச்சனா நல்லாவே பண்றாங்கன்னு பெயரை மட்டும் குறிப்பிடாமல் பேசினார். ஆரியை விட சுவாரஸ்யம் குறைவானவங்க இருக்காங்க, அவங்கள காப்பாத்த நம்பர் கேம் இருக்கா என்றும் கேட்டு மனுஷன் வச்சு விளாசிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X