இதையெல்லாம் மாத்திடுங்க.. விக்ரம் பட கதையை படித்து பார்த்து லோகேஷுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த கமல்!

சென்னை: விக்ரம் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் படு பிஸியாக உள்ள நடிகர் கமல்ஹாசன், படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இன்னும் முடிக்க முடியாமல் உள்ளது.

3 ஹிட் படங்கள்

3 ஹிட் படங்கள்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய 3 ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை இயக்குகிறார்.

கதையில் மாற்றம்

கதையில் மாற்றம்

இந்த படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் கதையை முழுவதும் படித்துப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் அறிவுறுத்தியுள்ளாராம்.

தேர்தலில் பிஸி

தேர்தலில் பிஸி

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட்டார். தேர்தலில் பிஸியாக இருந்ததால் தேர்தலுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

இந்நிலையில் படத்தின் கதையில் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி?

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதியும் இப்படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X