சின்னப்பொண்ணுவிடம் அத்துமீறியது சரியா… பிரியங்காவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்!
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கு ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நேற்று கமல் விருந்தே வைத்துவிட்டார்.
விதிமீறல் என்றால் எல்லா போட்டியாளர்களுக்கும் ஒன்று தான். யாருக்கும் சலுகை கிடையாது என்பதை கமல் போட்டியாளர்களுக்குத் நேற்று தெளிவாக விளக்கினார்.
குறிப்பாக பிரியங்கா கமலிடம் மாட்டிக்கொண்டு பதில் சொல்ல முடியாமல் பல கேள்விகளுக்கு மழுப்பினார்.

ஒரே குழப்பம்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பஞ்சதந்திரம் என்ற புதிய டாஸ்க் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொடுக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்தவர்களை மட்டும் இல்லாமல் பிக் பாஸ் ரசிகர்களையும் ஒரு குழப்பு குழப்பியது இந்த டாஸ்க் . நாணயத்தை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவித்ததை அடுத்து, வீடே களேபரமாகியது.

கோவம் வரலையா
இதையடுத்து, நேற்று சட்டையுடன் வந்த கமல் சிரித்துக்கொண்டே பல கேள்விகளை கேட்டார். அப்போது கமல் சின்னப்பொண்ணுவிடம் பிரியங்கா உங்களை செக் பண்ணும் போது உங்களுக்கு கோவம் வரலையா என்று கேட்டார், இல்ல சார் செக் பண்ணவானு கேட்டாங்க சார், நான் சரினு சொன்னேன் கோவம் வரவில்லை என்றார்.

விளாசிய கமல்
இதையடுத்து, பிரியங்காவிடம் பேசிய கமல், ஒரு டிவி தொகுப்பாளினியான உங்களுக்கு சின்னப்பொண்ணுவை செக் பண்ணதை சரினு நினைக்கிறீங்களா... ஏன் அப்படி பண்ணீங்க என்றார்.பகல் நேரங்களில் தூங்கியது. அக்ஷரா பேப்பரில் எழுதியதை விதிமீறல் என விமர்சித்தது, நிரூப் கையில் எழுதி காட்டியது என்பது உள்ளிட்ட பல தவறுகளை நேரடியாக கேட்டார். பிரியங்காவும் முடிந்த அளவு சமாளித்து பார்த்தார். கடைசியில் எதுவும் முடியாததால், எனது தவறை ஒப்புக் கொள்கிறேன். இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.

அபிஷேக் ராஜா
இதையடுத்து, வாடா மாப்பிள்ளை என்பது போல, அபிஷேக்கிடம் நிஜமாவே நீங்க பிக்பாஸ் பார்த்தது இல்லை என்று கேட்டு வறுத்தெடுத்தார். ஆமாம் சார் நான் பார்த்தது இல்லை என்று... அப்புறம் எப்படி மதுமிதாவை ஓவியானு சொன்னீங்க என்று கேட்டார்.. அப்போது சார் நான் ப்ரோமோ பார்ப்பேன் என்று மாத்தி மாத்தி பேசினார். இப்படி கமல் கேட்ட பல கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அந்த சினிமா பையன் முகம் வாடிப்போனது.


Click it and Unblock the Notifications











