அபிஷேக்கிடம் ரெவ்யூ கேட்ட கமல்... கருத்தை எதிர்த்த இமான் அண்ணாச்சி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று போட்டியாளர்களின் செயல்பாடுகளை குறித்து ஜாலியாக கலாய்த்து, கருத்து கேட்டார் கமல். பலரின் செயல்பாடுகளை பாராட்டினார்.
ஹவுஸ்மெட்கள் எப்படி வேலை செய்கிறார்கள், ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது குறித்து, மற்ற போட்டியாளர்களிடம் கேட்டார் கமல். அதற்கு போட்டியாளர்களும் வெளிப்படையாக பதிலளித்தனர். அப்போது ஹவுஸ்மெட்கள் பற்றி அபிஷேக்கிடம் ரெவ்யூ கேட்டார் கமல்.

இதற்கு பதிலளித்த அபிஷேக், இசைவாணிக்கு மக்கள் மகிழ்விப்பது ஒன்று தான் நோக்கம். அவள் இளமையிலேயே கஷ்டத்தை பார்த்ததால் பொருளாதாரத்தில் ஈர்ப்பு கிடையாது. நான் கிட்டாரிஸ்ட் என்பதால் முதலில் எனக்கு ரிதம் தான் கேட்கும். பிறகு தான் பாடல் வரி கேட்கும். ஆனால் இவளால் பாடல் வரிகள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாவனி ரோஜா பூ போன்றவர். அவர் கடந்து வந்த பாதைகள் முற்களை போன்றது. ஆனால் அவர் ரோஜா போன்றவர். ஐக்கி பெர்ரி ஒரு பார்பி டால் போன்றவர். அவரை பார்த்ததும் அனைவருக்கும் சிரிக்க தோன்றும், வைத்து விளையாட தோன்றும். ஆனால் அந்த டாலுக்கும் வலி இருக்கும். ஏக்கம் இருக்கு. ஆசா பாசங்கள் இருக்கு. அவரை வெறும் பொம்மையாக பார்த்து விட வேண்டாம். அவருக்குள் மிகப் பெரிய ஆழமான ஒரு ஆள் இருக்கு.
தாமரைச் செல்வி, இப்போதே என்னை விட்டால் கன்ஃபஷன் ரூமுக்குள் போய் அக்காவை போய் ரொம்ப பிடிக்கும் என சொல்லி விடுகிறேன். அவர் கிராமத்து தனமான ஆள். குழாயடி சண்டை போட சொன்னாலும் ரெடி, கொடி பிடித்து அரசிடம் கோரிக்கை வைத்து போராட சொன்னாலும் சரி என்கிற கேரக்டர்.
அக்ஷராவிடம் திரைக்கதை சொல்வதை பார்த்தால், நம்மால் இந்த அளவிற்கு கதை சொல்லி அவரை ஈர்க்க முடியவில்லையே என்ற எண்ணம் ராஜுவை பார்க்கும் போது வருகிறது. காரில் இருந்து இறங்குவதையே செமமாக சொல்கிறார். பாட்டில் வார்த்தையை தாண்டி இடையில் வரும் மியூசிக், ஹம்மிங் போல் கனெக்ட் எங்களுக்குள். தனக்கான வேலையை கரெக்டாக செய்யக் கூடியவர் என்பது அவர் போடும் ஆம்பிலேடிலேயே தெரிந்தது.
அண்ணாச்சி, பழம் திண்ணு கொட்டை போட்டவர். அவர் ஒரு பலாப்பழம் போன்றவர். அந்த கொட்டையை வைத்து சாம்பாரும் பண்ணலாம், கூட்டும் பண்ணலாம் எப்படி தான் அவரை பார்க்கிறேன். சுருதி, மூன்றாவது விசிலுக்காக துடிக்கும் குக்கர். அது வந்துடுச்சுன்னா அவ வெந்துடுவா. உலகையே ஜெயிச்சுடுவா.
நிரூப், இது போன்ற ஒரு உருவம் கடவுள் எனக்கு கொடுக்கலையேனு நினைக்கிறேன். அவன் சிங்கம் போன்றவன். அன்புன்னு வந்தா மென்மையானவர். அக்ஷராவை பார்க்கும் போது பழைய நடிகை வினோதினி போல் தோன்றும். முகத்திற்கு மூக்கழகு என்பது போல் அவரது கிளி மூக்கு அழகு. அபினவ், ரோஹன் கவாஸ்கருக்கு தான தெரியும் கவாஸ்கருக்கு பிறந்தது எவ்வளவு பெரிய பெருமை என்று. அதே போல் ஜெமினி, சாவித்ரியின் பேரனாக இருந்தாலும் பெருசாக ஆசாபாசங்கள் இல்லா நபர். இன்றைய நாள் புதுநாள். இன்றைய நாளுக்கு நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணணும் என்கிற ஆள்.
இந்த வீட்டிலயே எனக்கு பிடித்தது பிரியங்காவை தான். அவரை பார்த்தால் சகோதரி உணர்வு வருகிறது. என்னை வளர்த்தது எங்கள் அக்கா தான். அவள் திருமணமாகி சென்ற பிறகு மிகவும் மிஸ் பண்ணினேன். பாலூட்டாத தாய் போல் எனக்கு என் அக்கா. அந்த உணர்வு பிரியங்காவை பார்க்கும் போது வருகிறது.
ரெண்டு பேரு மட்டும் தான் இங்க என்னை அழ வைக்க முடியும். ஒன்று எங்க அக்கா, மற்றொன்று அம்மா. எங்க அப்பா கர்ணன் போன்றவர். அவர் அள்ளி கொடுத்ததால் 2016 ல் யாரும் எதிர்பாராத அளவிற்கு பெரிய இடத்தில் இருந்து நடுரோட்டுக்கு வந்து விட்டோம். கடந்த சில வருடங்களாக எங்க அம்மாவுடன் அதிகம் நேரம் நான் இருந்தது இல்லை. அதனால் தான் சின்ன பொண்ணு அம்மாவிடம் தினமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு இந்த நாளை துவங்குகிறேன். இன்று ஒற்றுமையாக இருக்க காரணம் கிச்சன் டீம் பிரியங்கா, சின்ன பொண்ணுவிடம் சென்றது தான் காரணம் என்றார் அபிஷேக்.
ஆனால் தன்னை பற்றி கூறிய கருத்தை இமான் அண்ணாச்சி ஏற்க மறுத்தார். அவரது பாயிண்ட் ஆஃப் வியூவில் அது சரி என நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றார் அண்ணாச்சி. பிரியங்காவும், இந்த ஷோவிற்கு வருவதற்கு முன் அபிஷேக்கின் வீடியோக்களை நிறைய பார்த்துள்ளேன். அப்போ எல்லாம் அவனை பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது அவன் வளர்ந்த குழந்தை என்று என்றார்.


Click it and Unblock the Notifications











