தப்ப சுட்டிக்காட்டினா.. நான் மட்டும்தானான்னு எதிர் கேள்வி கேட்குறாங்க.. யாரை சாடுகிறார் கமல்?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
சனிக்கிழமைகளில் வாரம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அலசும் கமல், எவிக்ஷனில் காப்பாற்றப்படும் இருவரின் பெயர்களையும் அறிவிப்பார்.

எவிக்ஷன் அறிவிப்பு
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சில டாஸ்க்குகளை கொடுக்கும் கமல் எவிக்ஷனையும் அறிவிப்பார். ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடும் சனிக் கிழமையே காட்சியாக்கப்படுவதால், வெளியேற்றப்படும் நபர் குறித்த தகவலும் சனிக் கிழமையே கசிந்து விடுகிறது.

முதல் ப்ரோமோ
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் காலை முதலே தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தப்பை சுட்டிக்காட்டினால்..
இதில் ஹாஃப் வொய்ட் கோட் சூட், பிங்க் ஷர்ட் என கலக்கலாய் வந்துள்ளார் கமல். இதில் பேசும் கமல், நீங்க தப்பு பண்றீங்கன்னு சுட்டிக்காட்டினா, நான் மட்டுமா பண்றேன்னு எதிர்கேள்வி கேட்குறாங்க.

மக்கள் தீர்ப்பே இறுதியானது
இன்னும் 3 வாரம் தான் இருக்கு.. அவங்க தப்ப அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ.. நீங்க நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்கங்றது ஓட்டு போடுற முறையிலேயே தெரியுது. மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அனிதா வாக்குவாதம்
இதில் யாரைப் பற்றி கமல் பேசுகிறார் என்ற பெரும் குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் பெரும்பாலும் அனிதாவை குறி வைத்துதான் பேசுகிறார் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். அனிதா தூங்கியதை சொன்ன பாலாஜியிடம் ஷிவானியும்தான் தூங்கினார் என்று வாக்குவாதம் செய்தார் அனிதா.

ஆட்டியூட் காட்டிய அனிதா
இதேபோல் நாமினேஷனின் போதும் தவறை சுட்டிக்காட்ட முயன்ற பாலாஜியிடம், நாமினேஷனின் போது மற்றவர்களை பேசக்கூடாது என்று நீங்கள் குறுக்கே பேசுகிறீர்கள் என்றும் பிராக்டீஸ் வாட் யூ பிரீச் என்றும் முகத்தை காட்டினார் அனிதா.

ஆரி ஏன் வேஸ்ட் பண்ணாரு
மேலும் கடலை பருப்பை ஏன் ஊற வைத்து வீணாக்கினீர்கள் என்று கேட்டதற்கும் நான் மட்டுமா வீணாக்குகிறேன் என்று விதண்டாவாதம் பேசினார் அனிதா. அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் ரம்யாவை கூட சொல்லியிருக்கலாம் என்றும் கடலை பருப்பு விவகாரத்தில் ஆரி ஏன் சாப்பாட்டை வீணாக்கினார் என்று ரம்யா எதிர்கேள்வி கேட்டதை நினைவு கூர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











