காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம்... கமல் வருவாரா?
Recommended Video

திருச்சி: காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்று நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தனது மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டுக்காக இப்போது திருச்சியில் முகாமிட்டுள்ளார் கமல் ஹாஸன். இந்தக் கூட்டத்திலும் காவிரி பிரச்சினை குறித்துதான் பிரதானமாக பேசப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சார்பில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தானும் கலந்து கொள்வதாக கமல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வருகிற 8ஆம் தேதி காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காகத் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் கண்டன அறவழிப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











