ஹாலிவுட்டில் விஸ்வரூபம் ப்ரிமியர் காட்சி... அமெரிக்கா சென்றார் கமல்!

By Shankar

Kamal Haasan
சென்னை: விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் காட்சி நாளை மறுநாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இந்தக் காட்சியில் பங்கேற்க கமல்ஹாஸன் நேற்று மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு ஒருவழியாக கமலின் விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவை நாளை மறுநாள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்துகிறார் கமல்ஹாஸன். ஹாலிவுட் தியேட்டர் க்ரோவ்-ல் இந்தக் காட்சி நடக்கிறது.

இதில் ஹாலிவுட் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு படத்தைப் பார்க்கின்றனர். பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

பெர்மன்டில் ஸ்பெஷல் ஷோ

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்புக் காட்சி 25-ம் தேதி காலை 8 மணிக்கு பெர்மன்ட் நகரில் உள்ள பிக் சினிமாஸ் மற்றும் 9 மணிக்கு செஞ்சுரி பசிபிக் காமன்ஸ் சினிமார்க் அரங்குகளில் நடக்கிறது.

இந்தக் காட்சிகளில் கமல்ஹாஸன், சேகர் கபூர், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த காட்சிகளுக்கு சிறப்பு டிக்கெட்டுகள் முன்பதிவு ஆரம்பித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X