மீண்டும் வேட்டி, மீசையில் கலக்கும் ‘பாபநாசம்’ கமல்
சென்னை: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தில் கமல் வேட்டி சட்டையில் சாதாரண கிராமத்து தந்தையாக பாந்தமாகத் தோன்றுகிறார்.
மலையாளத்தில் வெற்றி நடைப் போட்ட த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜோப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடந்து வருகிறது.

முதல் காட்சி...
த்ரிஷ்யம் படத்தின் முதல் காட்சியில் பாபநாசம் என போர்டு வைத்த பேருந்தில் கமல் தனது மனைவி மகள்களுடன் பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

கமலின் மனைவி...
இப்படத்தில் கமலின் மனைவியாக கௌதமி நடித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியாக கமல் - கௌதமி நடிக்க, அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது போல் கதை அமையப் பெற்றுள்ளது.

வேட்டி சட்டையில்...
நடிகர் கமல் கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு வெளியான விருமாண்டியில் வேட்டி சட்டையில் அரிவாள் மீசையுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் வேட்டி சட்டையில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கலாபவன் மணி...
இப்படத்தில் கலாபவன் மணியும் நடித்துள்ளார். கமலையும் அவரது குடும்பத்தையும் அடித்து உதைத்து உண்மையை வரவழைக்கும் போலீஸ்காரராக கலாபவன் மணி நடிக்கிறார். மலையாளத்தில் இந்த வேடத்தை காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் செய்திருந்தார்.

எதிர்பார்ப்பு...
விஸ்வரூபம் -2, உத்தம வில்லன் என கமலின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக உள்ளன. எனினும், கிராமத்து தந்தையாக கமல் நடித்துள்ள பாபநாசம் படம் குறித்து தற்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











