அட போங்க சார்.. அதான் நேத்தே ஊர் முழுக்க தெரிஞ்சுடுச்சே.. வெளியானது பிக்பாஸின் அடுத்த புரமோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து கமல் அறிவிக்கும் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. 16 போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார்.

கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் முதல் எவிக்ஷன் நடைபெறுகிறது.

மூன்று பேர் எஸ்கேப்

மூன்று பேர் எஸ்கேப்

மொத்தம் 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன் ஆகிய மூன்று பேரும் நேற்றே சேவாகிவிட்டார்கள். எஞ்சிய நான்கு பேரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அச்சத்தில் இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

கோட்டை கழட்டி

கோட்டை கழட்டி

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாய் வெளியேறப்போவது யார் என்று கமல் அறிவிக்கும் புரமோ வெளியாகியுள்ளது. எவிக்ஷனை அறிவிப்பதற்கு முன்பு கோட்டை கழட்டி சஸ்பென்ஸை கூட்டுகிறார் கமல்.

தாண்டவமாடுகிறது

தாண்டவமாடுகிறது

கமல் யாரை அறிவிக்கப் போகிறாரோ என பதைபதைப்பில் உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ். சனம் ஷெட்டியின் முகத்தில் ஈயாடவில்லை. முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற பீதி ஹவுஸ்மேட்ஸ்களின் முகத்தில் தாண்டவமாடுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனிடையே இன்றைய எபிசோடுக்கான காட்சி நேற்றே படமாக்கப்பட்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா நேற்றே வெளியேற்றப் பட்டுவிட்டார் என்ற தகவல் வெளியானது. இருப்பினும் இன்றைய எபிசோடில் கமல் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X