கார்த்தி சிதம்பரத்துக்காக பிரச்சாரம் செய்யும் கமல் ஹாஸன்?.. இது கமலுக்குத் தெரியுமா???

By Siva

சென்னை: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு ஆதரவாக கமல் ஹாஸன் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது மகன் கார்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இதையடுத்து சிவகங்கையில் நடந்த ப.சிதம்பரத்தின் பிரச்சார கூட்டத்திற்கு வெறும் 10 பேர் தான் வந்தனர்.

தொகுதியில் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள வரவேற்பு இதன் மூலம் தெரிகிறது. இதையடுத்து வாக்காளர்களை கவர அதிரடி முடிவு செய்துள்ளது கார்த்தி சிதம்பரம் தரப்பு.

கமல்

கமல்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து உலக நாயகன் கமல் ஹாஸன் பிரச்சாரம் செய்வார் என்று கார்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

கமலின் தந்தை பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசன் காங்கிரஸ்காரர். மேலும் அவருக்கு காமராஜர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

கமல் ஹாஸனுக்கும், ப. சிதம்பரத்திற்கும் இடையே நெருக்கம் உண்டு. கடந்த 2012ம் ஆண்டு நடந்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல் பேசுகையில், அடுத்த பிரதமர் வேட்டி கட்டிய தமிழராக இருப்பார் என்று சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசினார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

சிதம்பரத்திற்கு நெருக்கமானவர் என்பதால் கமல் நிச்சயம் கார்த்திக்காக பிரச்சாரம் செய்ய சிவகங்கை வருவார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

கமல் ஹாஸன் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக உள்ளார். அவ்வாறு விளம்பர தூதுவராக உள்ளவர் எந்த கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

எங்களின் விளம்பர தூதுவர்கள் எந்த கட்சியையாவது ஆதரித்து பிரச்சாரம் செய்தால் அவர்களின் விளம்பரத்தை நிறுத்திவிடுவோம். அதே சமயம் அவர்களை பிரச்சாரம் செய்யக் கூடாது என்று எங்களால் கூற முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலக நாயகன்

உலக நாயகன்

தேர்தல் ஆணைய விளம்பர தூதுவராக இருப்பதால் கமல் ஹாஸன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X