»   »  விருமாண்டி கெட்டப்பிலிருந்து ஆளவந்தான் கெட்டப்புக்கு மாறிய கமல்!

விருமாண்டி கெட்டப்பிலிருந்து ஆளவந்தான் கெட்டப்புக்கு மாறிய கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார்.

Kamal changes his getup

இந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை.

தூங்காவனம் வெளியாகும் போதே, அந்தப் பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் இன்னும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காகவே அந்த முறுக்கு மீசை கெட்டப் என்றும் கமல் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் கமலின் கனவுப் படமான மருதநாயகம் லைகா தயாரிப்பில் விரைவில் தொடங்கப் போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் இப்போதிலிருந்தே மருதநாயகம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதற்காகத்தான் இந்த கெட்டப் சேஞ்ச் என்றும் கூறப்படுகிறது.

English summary
Kamal Hassan has changed his getup suddenly and now he looks in Aalavandhan getup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil