தேவர் மகன் 2 டைரக்டர் இவர் தான்.... உறுதி செய்த கமல்

சென்னை : கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 வேலைகளை கமல் மீண்டும் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பாபநாசம் 2 படத்திலும் கமல் நடிப்பார் என கூறப்படுகிறது.

ஹீரோயின் யார் என்பது இதுவரை முடிவாகாததால் பாபநாசம் 2 படத்தின் ஷுட்டிங்கை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனா மற்றும் நதியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், விரைவில் இவர்களில் ஒருவரை ஓகே செய்து, படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து இயக்க போவது யார்

அடுத்து இயக்க போவது யார்

அடுத்தடுத்து பல படங்களில் கமல் பிஸியாக இருந்தாலும், அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் இப்போதே வெளிவர துவங்கி விட்டன. சமீபத்தில் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த கமல், தனது அடுத்த படத்தின் டைரக்டர் யார் என்பதை அவரே உறுதி செய்துள்ளார்.

இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

டேக் ஆஃப், சி யூ சூன், மாலிக் ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் தான் தனது அடுத்த படத்தை இயக்க போவதாக கமல் கூறி உள்ளார். இந்த படத்திற்காக தற்போது கதையை தானே தயார் செய்து வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

திரைக்கதை எழுதும் கமல்

திரைக்கதை எழுதும் கமல்

மகேஷ் நாராயணன், கமலின் விஸ்வரூபம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். தேவர் மகனின் இரண்டாம் பாகத்தை தான் மகேஷ் நாராயணன் இயக்க போகிறாராம். இந்த படத்திற்காக தான் கமல் திரைக்கதை எழுதி வருகிறாராம்.

தலைவன் இருக்கிறான்

தலைவன் இருக்கிறான்

தேவர் மகனின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ள இந்த படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை டைரக்டர் செய்ய மகேஷ் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

ஒரே கட்டமாக விக்ரம் ஷுட்டிங்

ஒரே கட்டமாக விக்ரம் ஷுட்டிங்

தற்போது நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷுட்டிங்கை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அரசியல் த்ரில்லர் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

காரைக்குடியில் கமல்

காரைக்குடியில் கமல்

விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஆண்டிரியா, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து சென்னையில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X