பிறந்தநாளில் பிக்பாஸில் கண்ணீர் விட்டு அழுத கமல்.. எல்லாத்துக்கும் காரணம் 'அன்னையா' எஸ்பிபி!
சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு பாடகர் எஸ்பிபி கடந்த ஆண்டு வாழ்த்து சொன்ன ஆடியோவை கேட்டு பிக்பாஸ் மேடையில் கண்கலங்கியது பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.
நடிகர் கமல் இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மெட்லி பர்ஃபாமன்ஸ்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமலுக்கு பிக்பாஸும் ஹவுஸ்மெட்ஸும் சர்ப்ரைஸ் வாழ்த்து கூறினர். அப்போது கமலின் ஹிட் பாடல்களை மெட்லியாக பாடி அசத்தல் பர்ஃபாமன்ஸ் கொடுத்தனர்.

எஸ்பிபி அன்னையா..
இதனை கேட்டு நன்றி கூறிய கமல், இந்த பாடல்களை கேட்டதும் என் நினைவுக்கு வருவது, இளையராஜாவும் என் அன்னையா எஸ்பிபியும்தான் என்றார். தொடர்ந்து பேசிய கமல், ஆண்டு தோறும் என்னுடைய பிறந்த நாளுக்கு அன்னையா எஸ்பிபி வாழ்த்து சொல்லி விடுவார்கள்.

மன்னிப்பு கேட்டார்
கடந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு நிகழ்ச்சியை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அவரால் அதில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

வாழ்க்கை பரிசு
என்னை போனில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், பிறந்த நாள் வாழ்த்து செய்தியை அவரது குரலில் ஒலிப்பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். அவரது அந்த குரல், அவருடைய வாழ்த்து எனக்கு வாழ்க்கை பரிசு என்றார்.

எஸ்பிபி ஆடியோ
அந்த குரலை இன்றும் நான் கேட்டேன் என கண்கள் கலங்க கூறினார். அப்போது கமலுக்கு கடந்த ஆண்டு எஸ்பிபி வாழ்த்து சொன்ன அந்த ஆடியோ பிக்பாஸ் மேடையில் ஒலிப்பரப்பட்டது.

ஆயுஷ்மான் பவ..
அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி.. இந்த பிறந்தநாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும்.. நான் ஹைத்ராபாத்தில் இருக்கிறேன், இல்லையென்றால் உங்களோடு இருந்திருப்பேன். நீங்கள் படப்பிடிப்பில் இருந்து வந்து விட்டீர்களா இல்லை படப்பிடிப்பிற்காக வட இந்தியாவில் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. எல்லாம் நன்றாகவே நடக்கும் ஆயுஷ்மான் பவ.. என்று கூறினார்.

கண்ணீர்விட்ட கமல்
எஸ்பிபி பேசியதை கேட்டு கண்கள் கலங்கி கண்ணீர் விட்டு அழுதார் கமல். கண்களில் வழிந்த கண்ணீரை தனது கையில் வைத்திருந்த டிஷ்யூ பேப்பர் மூலம் துடைத்துக் கொண்டார். எஸ்பிபியின் குரலை கேட்டு கமல் கலங்கியது ஹவுஸ்மெட்டுகளையும் கலங்க செய்தது.


Click it and Unblock the Notifications











