யாரால் முடியும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்த.. கலங்க வைத்த விருமாண்டி படத்தின் அந்த காட்சி!
Recommended Video
சென்னை: விருமாண்டி படத்தில் தனது தாயின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் நடிகர் கமல்ஹாசன் கதறி அழும் காட்சி வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று 65வது பிறந்தநாளை கொண்டாடும் கமல், தனது 60 ஆண்டு காலத்தை சினிமாவுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.
அவர் இதுவரை நடித்த படங்களில், கமல் இன்னும் கொஞ்சம் பெட்டரா நடித்திருக்கலாம் என்ற வார்த்தையை எந்த படத்திலும் யாரும் நிச்சயமாக கூறியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

வெளுத்து வாங்கியிருப்பார்
அந்த வகையில் விருமாண்டி படத்தில் கமல் முழுக்க முழுக்க கிராமத்து மனிதராகவே மாறிப்போயிருப்பார். உடல் மொழியிலும் வாய் மொழியிலும் வெளுத்து வாங்கியிருப்பார்.

கண்களே இமைக்க மறக்கும்
அப்படத்தில் கமல் வரும் ஒவ்வொரு காட்சியும் கண்களே இமைக்க மறந்து ரசிக்கும் காட்சிகள். விருமாண்டி படத்தில், விருமாண்டியாக வலம் வரும் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பார் அபிராமி.

எழுத்து இயக்கம்
பசுபதி, ரோகினி, நாசர், சண்முகராஜன், எஸ் என் லட்சுமி உட்பட ஒரு நடிகர் பட்டாளமே நடித்திப்பார்கள். இந்த படத்தை கமலே எழுதி இயக்கி நடித்திருந்தார். மரண தண்டனைக்கு எதிராக ஒலித்தது இப்படம்.

கதறி துடிப்பார்
இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகையான எஸ்என் லட்சுமி கமலுக்கு தாயாக நடித்திருப்பார். ஒருக்கட்டத்தில் எஸ் என் லட்சுமி மரணிக்கவே அந்தக்காட்சியில் தனது தாயின் இழப்பை ஏற்க முடியாமல் கதறி துடிப்பார். அன்பின் மிகுதியால், தன்னை விட்டுச் சென்ற தாயின் மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டால் எந்திரிடி.. நாயே.. என கத்தி கதறுவார்.
அன்பே சிவம்
இன்று கமலின் பிறந்த நாளை முன்னிட்டு விருமாண்டி படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சியை வைரலாக்கி வருகின்றனர். இதேபோல் அன்பே சிவம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











