காத்து போன பலூன் மாதிரி ஆயிட்டீங்களே.. சோகத்தில் இருந்த ஹவுஸ்மேட்ஸை தரமாய் செய்த கமல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் ஏற்கனவே எவிக்ட்டான அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

வந்தவர்கள், வந்தோமா போனோமா என்றில்லாமல் வெளியே யார் யாருக்கு என்னென்ன இமேஜ் உள்ளது என்பதை விலாவரியாக சொல்லிவிட்டு சென்றனர்.

ஈயாடவில்லை..

ஈயாடவில்லை..

இதனால் ரியோ, பாலாஜி மற்றும் ரம்யாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ரியோவின் முகத்தில் வெளியே இருந்து ஹவுஸ்மேட்ஸ் வந்த பிறகு ஈயாடவில்லை. எதையோ இழந்த சோகத்திலேயே இருந்து வருகிறார்.

ரியோவை காணவில்லை

ரியோவை காணவில்லை

எப்போதும் சோகமே உருவாய் இருக்கிறார். போதா குறைக்கு பணப்பெட்டியை கேபி தூக்கி சென்றதால் மொத்தமாய் டவுன் ஆகிவிட்டார் ரியோ. ரியோவை காணவில்லை என சமூக வலைதளங்களில் கன்னாபின்னாவென கழுவி ஊற்றி வருகின்றனர்.

ரம்யாவும் டல்..

ரம்யாவும் டல்..

பாலாஜி ஆளே மாறிவிட்டார். ஏற்கனவே சோகமாய் இருந்த பாலாஜியை ஷிவானியும் தன் பங்குக்கு வச்சு செய்து விட்டார். ரம்யாவும் டல்லாகி விட்டார். இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.

கமல் கேள்வி

கமல் கேள்வி

இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸுடன் பேசும் கமல், பளீச்சென அதை கேட்டு விட்டார். அதாவது, பழைய நண்பர்களின் வருகை உங்களுக்கு எந்த மாதிரியான உணர்வை கொடுத்தது என்று கேட்கிறார்.

கஷ்டமா இருந்தது

கஷ்டமா இருந்தது

அதற்கு பதில் கூறும் ரம்யா, வெளியே நடக்குறத சொன்னாங்க, அதைக் கேட்டு கொஞ்சம் அப்செட் ஆயிடுச்சு.. என்றார். அவரை தொடர்ந்து பேசும் ரியோ, வந்த நிறைய பேர், எங்களை இப்படி சொல்லிட்டாங்க அப்படி சொல்லிட்டாங்கன்னு சொல்லும் போது கொஞ்ம் கஷ்டமா இருந்தது என்று கூறுகிறார்.

காத்து போன பலூன் போல

காத்து போன பலூன் போல

இதனைக் கேட்ட கமல், எனக்கு உங்கள் முகங்களை எல்லாம் இப்படி பார்க்க பிடிக்கவே இல்லை என்கிறார். மேலும் காத்து போன பலூன் போல உட்காந்திருக்கீங்க என்றும் கூறி டேமேஜ் செய்கிறார்.

அப்படி நினைக்க போறீங்க..

அப்படி நினைக்க போறீங்க..

தொடர்ந்து பேசும் கமல், வெளியே வந்த உங்க முகம் கண்டிப்பா மலரும்.. அப்பா வந்துட்டோமே அப்படிங்றதுக்காக இல்ல.. இந்த ஒரு சைடு வேற இருக்கா? தேவையில்லாம கவலைப்பட்டுட்டு இருந்தோமே அப்படின்னு நினைக்கத்தான் போறீங்க என்று கூறுகிறார்.

கவலை தெளிவாக தெரிகிறது

கவலை தெளிவாக தெரிகிறது

கமல் இவ்வளவு பேசியும் ரியோவின் முகத்தில் சோகம் தாண்டவமாடுகிறது. அவரால் சிரிக்க கூட முடியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள், ஆரிக்கு முன்னால் தோற்று வெளியேறப் போகிறோமே.. ஆரி வெற்றி பெற போகிறாரே என்ற கவலை தெளிவாக தெரிகிறது என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X