Kamal: "கமல் உதவி மட்டும் பண்ணல... மருத நாயகம் படத்துல ஒரு ரோல்!!” என் உயிர் தோழன் பாபு உருக்கம்
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.
என் உயிர் தோழன் பாபு என்றே அழைக்கப்பட்ட அவர், மூன்று தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால், படுக்கையிலேயே கிடந்த பாபுவின் மறைவு, திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவருக்கு கமல்ஹாசன் உதவியது பற்றியும், மருதநாயகம் படத்தில் பாபு நடிக்கவிருந்தது பற்றிய தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

என் உயிர் தோழன் பாபு உருக்கம்: பாரதிராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் உயிர் தோழன். இளையராஜா இசையில் என் உயிர் தோழன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானாலும், படம் என்னவோ சுமாராக ஓடியது. ஆனால், இந்தப் படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தது ஹீரோ பாபு தான். பக்கா கிராமத்து ஹீரோவுக்கான மெட்டீரியலாக இருந்த பாபு, இந்தப் படத்திற்குப் பின்னர் பிஸியான நடிகரானார்.
விக்ரமன் இயக்கத்தில் 'பெரும்புள்ளி' திரைப்படத்தில் நடித்த பாபு, அதன் பின்னர் 'தாயம்மா', 'பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' படத்திலும் ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கான போட்டியில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த பாபு, 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் கமிட்டாகியிருந்தார். அப்போதுதான் அந்த துயரச் சம்பவம் நடந்தேறியது. சண்டைக் காட்சிக்காக டூப் போடாமல், பல அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார் என் உயிர் தோழன் பாபு.
மேலும், கமல்ஹாசன் என்கூடவே இருந்தார் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் என் உயிர் தோழன் பாபு. கமலின் மருதநாயகம் 1997ம் ஆண்டு தொடங்கி, சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பட்ஜெட் பிரச்சினை காரணமாக முடங்கிய இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் இப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், என் உயிர் தோழன் பாபுவும் இந்தப் படத்தில் நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், என் உயிர்த் தோழன் பாபு, கமல்ஹாசன் குறித்து பேசிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதில், தான் சிகிச்சையில் இருந்தபோதும், படுக்கையிலேயே முடங்கிவிட்ட போதும் கமல்ஹாசன் தான் தனக்கு உதவியதாகக் கூறியுள்ளார். அவர் எனக்கு நல்ல நண்பராகவும் இருந்தார். அதோடு, கமல் இயக்கி நடித்த மருதநாயகம் படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருந்ததார். மருதநாயகத்தில் கால் இல்லாமல் வரும் ஜமீன்தாரின் மகனாக நடிக்க இருந்தேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், கமல்ஹாசன் என்கூடவே இருந்தார் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளா என் உயிர் தோழன் பாபு. கமலின் மருதநாயகம் 1997ம் ஆண்டு தொடங்கி, சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பட்ஜெட் பிரச்சினை காரணமாக முடங்கிய இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் இப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், என் உயிர் தோழன் பாபுவும் இந்தப் படத்தில் நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











