»   »  பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா ஏன் திரும்பி வரவில்லை?: காரணம் சொன்ன கமல்

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா ஏன் திரும்பி வரவில்லை?: காரணம் சொன்ன கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வராததன் காரணத்தை கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகப் பிரபலமாகியுள்ளார் நடிகை ஓவியா. அவர் கிளம்பிச் சென்றதில் இருந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஆர்த்தி, ஜூலி, காயத்ரி, சக்தி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜூலி

ஜூலி

ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். முன்னதாக தனது நடவடிக்கைக்காக ஜூலி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

வீடியோ

வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அவர் வெளியிட்ட செல்ஃபி வீடியோவை நிகழ்ச்சியில் போட்டுக் காட்டினார்கள்.

வளர்ச்சி

வளர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு உயர்வு கிடைத்துள்ளது. ஏணியிலேயே நின்று கொண்டிருக்க முடியுமா, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு உயர்வான நிலைக்கு ஓவியா சென்றுவிட்டார் என்று கமல் தெரிவித்தார்.

English summary
Kamal Haasan has revealed the reason for Oviya's absence in the Big Boss programme on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X