கெளம்புறேன், கெளம்புறேன்னு ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய உண்மையை சொன்ன கமல்

By Siva

Recommended Video

Bigg Boss 2 Finale Highlights | அப்பாடா, இந்த பிக் பாஸ் 2 ஒரு வழியா முடிஞ்சிடிச்சி.

சென்னை: ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய ரகசியத்தை தெரிவித்துவிட்டார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் 2 டைட்டில் ரித்விகாவுக்கு கொடுக்கப்பட்டது. ஃபினாலே நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார்கள். முன்னாள் போட்டியாளர்கள் வந்து மேடையில் நடனம் ஆடினார்கள்.

முன்னாள் போட்டியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை கொடுத்தார் கமல்.

கமல்

கமல்

போட்டியாளர்கள் அமரும் சோபாவில் உட்கார்ந்த கமல் முன்னாள் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தார். அதாவது தான் தான் போட்டியாளர் என்றார். உடனே ஜனனி மைக்கை கையில் எடுத்து நீங்க இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறீர்கள், அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதுவரை தாக்குப்பிடித்துவிட்டேனே என்ற சந்தோஷம் என்று பதில் அளித்த கமல் பார்வையாளர்களை பார்த்து நன்றி என்று கூறி கும்பிட்டார்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

நான் ஏதாவது செய்தால் மன்னித்துவிடுங்கள். வேண்டும் என்றே செய்யவில்லை. செய்யச் சொன்னார்கள் செய்துவிட்டேன் என்று கூறினார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதை கமல் உறுதி செய்துவிட்டார். இதை அவர் உறுதி செய்தது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

எவிக்ஷன்

எவிக்ஷன்

எவிக்ஷனில் உங்களை நாமினேட் செய்தால் என்ன பண்ணுவீங்க என்ற ஷாரிக்கின் கேள்விக்கு வெளியே போய்விடுவேன் என்றார் கமல். போட்டியாளர்கள் எப்படி கமலை பார்த்ததும் எழுந்து நின்றார்களோ அதே போன்று கமல் அவர்களை பார்த்ததும் சிறுபிள்ளை போன்று எழுந்தது ரசிகர்களை கவர்ந்தது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் ஷோவுக்கு எதற்காக வந்தீர்கள் என்ற கேள்விக்கு புகழ் என்பது போக இத்தனை மக்கள் என்னை பார்ப்பதும், நான் அவர்களை பார்ப்பதும் தேவை என்று ஹவுஸ்மேட்டாகவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராகவும் பதில் அளித்தார் கமல். அது பாதி இது பாதி கலந்து செய்த கலவை நான் என்று பன்ச் வசனம் பேசினார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X