»   »  சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....?!

சபாஷ் நாயுடுவுக்கு சகுனம் சரியில்லை....?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் செண்டிமெண்ட் மீது நம்பிக்கை இல்லாதவராகத்தான் தன்னைக் காட்டிக்கொள்வார். ஆனால் பெயரில் ஒரு எ சேர்த்து எழுதுவார். அது வேற டிபார்ட்மெண்ட்!

இந்த சபாஷ் நாயுடு படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ சிக்கல் மேல் சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது.


டைட்டில்

டைட்டில்

கமல் படங்கள் பொதுவாக ரிலீஸில்தான் பஞ்சாயத்து கிளப்பும். இந்த படம் டைட்டில் அறிவிப்பிலேயே பஞ்சாயத்து கிளம்பியது. நாயுடு என்று சாதிப் பெயரை எப்படி கமல் வைக்கலாம் என சில குரூப்கள் கிளம்பி அடங்கின.


தேர்தல்

தேர்தல்

டிசம்பர் 1 இல் ரிலீஸ் என்று சொல்லித்தான் ஏப்ரலில் தொடங்கினார் கமல். ஆனால் படத்தைத் தொடங்கவே தாமதமானது. மே 7 ஆம் தேதி ஷூட்டிங் என்று சொன்ன கமலை 'அப்ப ஓட்டு போட மாட்டீங்களா' என்று ரசிகர்கள் கேட்க, ஓட்டு போட்டுட்டே போறேன் என்று உட்கார்ந்தார் கமல். ஒரு வழியாக மே14 ல் சென்று ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்து வந்தார். ஆச்சர்யமாக பார்த்தார்கள்.


இயக்குநர்

இயக்குநர்

அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படத்தின் இயக்குநருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் இன்னும் அதில் இருந்து மீளவில்லை. எனவே கமலே இயக்கத்தையும் கையில் எடுக்க வேண்டியதாயிற்று.


கால் முறிவு

கால் முறிவு

படப்பிடிப்பு முடித்து திரும்பிய கமலுக்கு அவரது அலுவலகத்திலேயே விபத்து ஏற்பட்டது. கால் முறிந்து ஆபரேஷன் வரை போனது. இதில் இருந்து கமல் மீளவே 5 மாதங்கள் ஆனது. அப்பல்லோவில் அட்மிட் ஆகி நல்ல வேளை ஆபரேஷனோடு தப்பித்தார்.


கவுதமி விலகல்

கவுதமி விலகல்

கமல் சபாஷ் நாயுடு படத்தால் தனது நீண்ட கால தோழியைப் பிரிய வேண்டியதாயிற்று. கமல் கவுதமியோடு லிவிங் இன் ரிலேஷனில் இருந்தது எல்லோருக்கும் தெரியும். சபாஷ் நாயுடு படத்தில் கமல் மகள் ஸ்ருதியும் நடிக்கிறார். படத்துக்கு கவுதமிதான் காஸ்ட்யூமர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பஞ்சாயத்தே கமல் கவுதமி பிரிவு வரை போனது. படப்பிடிப்பின் போது இன்னொரு நடிகையுடன் கமல் நெருக்கமானதே காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆக, கமல் தனிமரமாக காரணமும் சபாஷ் நாயுடுதான்.


இப்படி சபாஷ் நாயுடு தொடங்கியதில் இருந்தே கமலை துரத்துகின்றன பிரச்னைகள். இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க போகிறார்களாம்!English summary
Kamal Hassan is facing lot of issues after launched his Sabash Nayudu tri-lingual movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil