வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்கணும்.. கிளம்புங்க.. வாழ்த்து கூறிய குடும்பத்தினரை கலாய்த்த கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலுக்கு அவரது குடும்பத்தினர் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரது பிறந்த நாளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கமலுக்கு ஹவுஸ்மேட்ஸ்களே தயாரித்த கேக் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கமலின் ஹிட் பாடல்களை பாடி அசத்தினர் ஹவுஸ்மேட்ஸ்.

நாகார்ஜூனா வாழ்த்து
பின்னர் எஸ்பிபி கமலுக்கு கடந்த ஆண்டு சொன்ன வாழ்த்து ஆடியோ மெஸேஜ் ஒளிபரப்பப்பட்டது. அதனைக் கேட்டு கண்கலங்கினார் கமல். தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் இருந்து நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

கமலுக்கு வாழ்த்து
அதனை தொடர்ந்து கமலின் குடும்பத்தார் பிக்பாஸ் மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட டிவிகளில் தோன்றினர். சாருஹாசன், சுஹாசினி, கமலின் சகோதரி நளினி, அனுஹாசன், மற்றும் அவரின் குடும்பத்தினர் ராதா, ராமா உள்ளிட்ட பலரும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

கண்ணாடியை மாத்தனும்
அப்போது கமலின் அக்காள் நளினி, கமல் உன்னை பார்க்கும் போது நம் அப்பாவை பார்ப்பது போன்றே இருக்கிறது. அப்பாவிடம் இருந்ததை விட எல்லாமே இரண்டாக தெரிகிறது என்றார். அதற்கு உடனே கமல், உங்கள் கண்ணாடியை மாத்தனும் என கலாய்த்தார்.

மகள்கள் என்ட்ரி
தொடர்ந்து பேசிய குடும்பத்தினரிடம், வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும், கிளம்புங்கள் என்பதை போல கூறி விடை பெற்றார் கமல். அவர்களை தொடர்ந்து கமலின் மகள்களான ஸ்ருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் வீடியோ மூலம் என்ட்ரி கொடுத்தனர்.

ஹைத்ராபாத் ஷுட்டிங்
அவர்களை பார்த்ததும் சற்று இன்ப அதிர்ச்சி அடைந்தார் கமல். தொடர்ந்து அவர்கள் இருவரும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடினர். தொடர்ந்து பேசிய ஸ்ருதிஹாசன், ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம் என்றார்.

குடும்பமே வேலை செய்கிறது
தொடர்ந்து பேசிய அக்ஷரா, மும்பையில் ஷுட்டிங்கில் இருப்பதாக கூறினார். அவரும் பாதுகாப்பு விதிமுறைகளை ஃபாலோ செய்வதாக கூறினார். இதனைக் கேட்ட கமல் குடும்பமே வேலை செய்கிறது. இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கிறது என்றார்.

என்னை வேலை செய்யவிடுங்கள்
அப்போது பேசிய ஸ்ருதிஹாசன், உங்களால் பெருமை கொள்கிறோம். பிறந்த நாள் என்பதற்காக சொல்ல வில்லை. வேலை பார்க்க உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம் என்றார். இதனைக் கேட்ட கமல், குட் என்று கூறியப்படி, வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்கவில்லை என்ற கோபித்துக் கொள்ள போகிறார்கள். குடும்ப நிகழ்ச்சி ஆகிவிட்டது கிளம்புங்கள், என்னை வேலை பார்க்க விடுங்கள் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











