கமல் ஹாஸனையே போலி என்கிறாரா காயத்ரி ரகுராம்?
Recommended Video

சென்னை: காயத்ரி ரகுராம் கமல் ஹாஸன் சொன்னது தவறு என்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லாதது குறித்து கமல் ஹாஸன் கண்டித்தார். அவர் கண்டித்ததை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை பாராட்டினார்கள்.
கண்டித்தபோது கமல் புகைப்பிடிப்பது குறித்து பேசினார்.

சிகரெட்
ஆணுக்கு சமமாக இருப்பதில் ஆணை விட சிறப்பாக இருப்பதில் தான் உள்ளது. ஆண்கள் செய்யும் தவறுகளை எல்லாம் செய்வதால் அவர்களை விட சிறந்தவர்களாகிவிட முடியாது. உதாரணத்திற்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்கு சமமாக ஆக்காது. ஏன் சொல்கிறேன் என்றால் அது ஒழுக்கக் கேடு என்பதை விட ஆரோக்கியத்திற்கு கேடு என்று கமல் தெரிவித்தார்.
காயத்ரி
கமல் சொன்னது தவறு என்பது போன்று காயத்ரி ரகுராம் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சிகரெட் பிடிப்பதால் ஆண்களை விட பெரியவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களை போன்று அதே விரக்தி, காரணத்திற்காக தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் அவர்களை காப்பியடிப்பது போன்றும் செய்யாதீர்கள். இது போலி என்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
கருத்து
காயத்ரி கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை எதிர்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கோபம்
கமல் சொன்னதை புரிந்து கொள்ளாமல் ட்வீட்டியுள்ளார் காயத்ரி என்று கமெண்ட் போட்டுள்ளனர். சிலரோ கமல் ஹாஸனையே குறை சொல்கிறீர்களா என்று காயத்ரியை திட்டியுள்ளனர்.
ஆண்கள்
காயத்ரி ரகுராமின் ட்வீட்டை பார்த்த சிலரோ மிகச் சரி, உண்மையான வார்த்தைகள் என்று பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











