மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தில் இணைந்தனர் கமல் ரசிகர்கள்
கமல் ஹாஸனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தைத் தங்கள் பகுதிகளில் தொடங்கினர் அவரது நற்பணி இயக்கத்தினர்.
நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், காந்தி ஜெயந்தியன்று பிரதமர் நரேந்திர மோடி க்ளீன் இந்தியா இயக்கத்தில் இணைய வருமாறு விடுத்த அழைப்பை ஏற்பதாகத் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் அழைப்பை ஏற்பதுடன், 9 மில்லியன் பேரை இந்த இயக்கத்தில் இணைப்பதாகவும் கமல் ஹாஸன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் க்ளீன் இந்தியா திட்டத்தை இன்று (அக்டோபர் 5ம் தேதி) தூத்துக்குடியில் துவங்கினர்.
கமல் நற்பணி இயக்கம் சார்பில் இலவச மருத்துவம முகாமும் நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு துவங்கிய இந்த திட்டத்தை இயக்கத்தின் பொறுப்பாளர் தங்கவேலு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற உள்ள இந்த க்ளீன் இந்தியா திட்டப் பணிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கமல் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பங்கெடுக்கவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











