twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு கிடைப்பது ஏன் கமலுக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது...ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களாக, உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் ரஜினியும், கமலும். இவர்கள் நிஜ வாழ்க்கையில் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் இவர்களை இரு துருவங்களாக மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க மாட்டார்களா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நடிப்பில் பார்த்தால் கமல் தான் சீனியர். அவர் 4 வயதிலேயே நடிக்க வந்து விட்டார். ரஜினி, அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போதே கமல் சினிமாவில் டாப் நடிகராக இருந்தார். ஆரம்பத்தில் வில்லன், சப்போர்டிங் ரோங்களிலேயே நடித்து வந்த ரஜினி, பல படங்களில் நடித்த பிறகு தான் ஹீரோவானார்.

    கமல் 225 க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் அவரை இரண்டாவது இடத்திலேயே ரசிகர்கள் வைத்துள்ளனர். அதே சமயம் 168 படங்களில் நடித்த ரஜினியை தான் சூப்பர் ஸ்டார் என சொல்லி, முதலிடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின் கெளரவம், அடையாளம், புதுமைகள் பல செய்பவர் என புகழப்பட்டாலும் கமலுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே தற்போது வரை கமல் ரசிகர்களின் ஆதரங்களாக இருந்து வருகிறது.

    நயன்தாராவை பற்றி அப்படி பேசிய கரண் ஜோஹர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.. ஜவான் வரட்டும்! நயன்தாராவை பற்றி அப்படி பேசிய கரண் ஜோஹர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.. ஜவான் வரட்டும்!

    ரஜினிக்கு மட்டும் தானா

    ரஜினிக்கு மட்டும் தானா

    மத்திய விருதுகளில் கூட கமலுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினிக்கு பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. கமல், பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதினை பெற்றிருந்தாலும் இந்திய அரசால் வழங்கப்படும் சினிமா துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினிக்கு தான் வழங்கப்பட்டது.ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்ட போதே ரசிகர்கள் இதை ஆதங்கத்துடன் கேட்டனர்.

    ரஜினிக்கு விருது

    ரஜினிக்கு விருது

    இந்நிலையில் தற்போது அதிகம் வரி செலுத்துபவர் என பாராட்டி, ரஜினிக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரியை முறை செலுத்து வருபவர் கமல். இதை பலமுறை தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசிற்கு எதிராகவும், தமிழக அரசிற்கு எதிராகவும் பேசும் போதெல்லாம், இதற்காக என் வீட்டில் இன்கம் டேக்ஸ் ரைடு வந்தாலும் கவலையில்லை. ஏனெனில் நான் முறையாக வரி செலுத்துபவன் என்பது எனக்கும் தெரியும், வருமான வரித்துறைக்கும் தெரியும் என சவால் விட்டு பேசி உள்ளார்.

    ஆதங்கத்தில் பொங்கும் ரசிகர்கள்

    ஆதங்கத்தில் பொங்கும் ரசிகர்கள்

    ரஜினி மீதாவது சில ஆண்டுகளுக்கு முன் வருமான வரித்துறை வழக்கு தொடுத்திருந்தது. கோர்ட் வரை சென்ற பிறகே வருமான வரித்துறை தங்கள் வழக்கை வாபஸ் பெற்றது. ஆனால் கமலுக்கு அப்படி எதுவும் இல்லாத போது ஏன் அவருக்கு மட்டும் உரிய அங்கீகாரத்தை தர மறுக்கிறார்கள் என ரசிகர்கள் ஆதங்கத்தில் பொங்கி, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    கமலுக்கு விருது கொடுக்கலியா?

    கமலுக்கு விருது கொடுக்கலியா?

    ஆனால் இதற்கு பதிலளித்துள்ள சிலர், கமலுக்கு வருமான வரித்துறை விருது வழங்கவில்லை என யார் சொன்னது. சரியாக விஷயம் தெரிந்து கொண்டு எதையும் பேசுங்கள். 2011 ம் ஆண்டே கமலுக்கு 'சரியாக வருமான வரி செலுத்தி சிறந்த குடிமகனுக்கு உதாரணமாக விளங்குபவர்' என சென்னை வருமான வரித்துறை விருது வழங்கி கெளரவித்துள்ளது.கமல் மீதான அன்பில் பேசுவதெல்லாம் சரி தான். ஆனால் சரியான தகவல்களை தெரிந்து கொண்டு பேசுங்கள். சொல்லப் போனால் ரஜினிக்கு தான் தாமதமாக இந்த விருதை கொடுத்துள்ளது வருமான வரித்துறை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Today income tax department honoured Rajinikanth for best tax payer. But Kamal fans asked why income tax department didn't give award for Kamal. But some other netizens clarified that income tax department gave award to Kamalhaasan in 2011 for a shining example of good citizenship' by paying taxes his taxes on a regular basis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X