Mari Selvaraj: மாரி செல்வராஜ் செவுட்டுலயே அறைஞ்சாரு.. பரியேறும் பெருமாள் நடிகர் சொன்ன மேட்டர்!
சென்னை: மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைத்து வந்து அசிங்கப்படுத்தி விட்டார் என கமல் ரசிகர்கள் பயங்கர கொந்தளிப்பில் உள்ளனர்.
தேவர் மகன் படத்தை உருவாக்கி கமல்ஹாசன் மிகப்பெரிய வரலாற்று பிழை செய்து விட்டார் என்கிற ரேஞ்சுக்கு அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையிலேயே தான் படங்களை இயக்கி வருவதாக மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் பேசிய பழைய பேட்டியை எடுத்துப் போட்டு கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை ரவுண்டு கட்டி வருகின்றனர்.

நீங்க மட்டும் எளியவர்களை அடிக்கலாமா: எளியவர்களுக்காக படம் பண்ணுகிறேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை பண்ணி வருகிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில், தனது படத்தில் நடித்த எளியவர்களையே இப்படி ஆணவத்துடன் அடிக்கலாமா மாரி செல்வராஜ் என மறைந்த நடிகர் நெல்லை தங்கராஜின் பழைய பேட்டியை ஷேர் செய்து வருகின்றனர்.
கமலை தாக்கிய மாரி செல்வராஜ்: கமல்ஹாசனின் தேவர்மகன் படம் உருவாக்கிய பாதிப்பு குறித்து மாரி செல்வராஜ் எழுதிய மிக நீண்ட கடிதம் கமல்ஹாசனை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
மேலும், ஏற்கனவே பாபநாசம் படத்தை பற்றி மாரி செல்வராஜ் பேசிய பேட்டி ஒன்றும் வெளியாகி கமல் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கமல் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைத்து இப்படி மனதில் உள்ள வன்மத்தை எல்லாம் கொட்டித் தீர்க்கலாமா என விளாசி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் செவுட்டுலயே அடிச்சாரு: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலேயே அதிகாரத்தை எளிய நடிகரான தெருக்கூத்து கலைஞர் மறைந்த நெல்லை தங்கராஜ் மீது பயன்படுத்தி உள்ளார் என்கிற அதிர்ச்சியான மேட்டரை தற்போது கமல் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த பேட்டியில், நிர்வாணமாக ஓடவிட்டாரு மாரி செல்வராஜ், என்னை ஏன் கூப்பிடுற உங்க அம்மைய கூட்டிட்டுப் போ என வசனத்தை மாற்றி சொல்லி விட்டேன். உடனே செவுட்டுலயே அடிச்சாரு மாரி செல்வராஜ் என நெல்லை தங்கராஜ் பேசிய பழைய பேட்டியை தற்போது எடுத்து ஷேர் செய்து நீங்க மட்டும் எப்படி அடிக்கலாம். வசனம் மறந்து விட்டால் சொல்லிக் கொடுங்க, புத்தரை ஃபிரேமில் காட்டினால் மட்டும் போதாது, இசக்கிகளை மாமன்னன் ஆக்குகிறேன் என சொல்லி விட்டு இஷ்டத்துக்கு அடிக்கலாமா மாரி செல்வராஜ் என வச்சு செய்து வருகின்றனர்.

ஹீரோவை அடிக்க முடியுமா: தனுஷ், உதயநிதி ஸ்டாலின் போன்ற ஹீரோக்கள் சொன்னது போல நடிக்க வில்லை என்றால் இப்படி அடிப்பீங்களா? இன்னொரு டேக் தானே சொல்லிக் கொடுத்து எடுப்பீங்க, அப்புறம் உங்களுக்கு நீங்கள் எதிர்க்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு மாரி செல்வராஜ் என வேதம் புதிது படத்தில் சத்யராஜை வெளுப்பது போல வெளுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











