கடைசியாக சனம் ஷெட்டியின் கணக்கை தீர்த்த கமல்.. மீண்டும் நடைபெற்ற கால் டாஸ்க்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மீண்டும் சனம் ஷெட்டிக்காக கால் டாஸ்க் நடைபெற்றது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாராங்களாக கால் டாஸ்க் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்த இந்த டாஸ்க்கில் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்தன.
இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார் கமல். அப்போது கால் டாஸ்க்கில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தார்.

கணிதமா? கலக்கமா?
தொடர்ந்து சனம் ஷெட்டிக்கு ஏன் யாரும் கால் பண்ணலை என்று கேட்ட கமல், அதற்கு காரணம் கணிதமா? இல்லை கலக்கமா என்று கேட்டார். சனம்க்கு ஏன் கால் பண்ணலை அவருக்கு பண்ணாததற்கு காரணம் என்ன என்றும் கேட்டார்.

யார் பண்ண போறீங்க?
அதற்கு பதில் சொன்ன ரமேஷ், அவங்களுக்கு சம்யுக்தா தான் கால் பண்ண வேண்டும் என்றார். அவர்தான் இப்போ இல்லையே என்ற கமல், இப்போ யார் சனம்க்கு கால் பண்ண போறீங்க என்றார்.

எதுக்காக வந்தீங்க?
அதற்கு ஆரி கையை தூக்க, ரமேஷ் இப்போ நீங்க ரெடியா என்று கேட்டார். ரெடி என்று இருவரும் அவரவர் ஏரியாவுக்கு சென்று டாஸ்க்கை செய்தனர். அப்போது காலராக இருந்த ரமேஷ், எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன சனம் ஷெட்டி நான், இதுவரை 23 படங்கள் வரை பண்ணியிருக்கேன் என்று தனது கதையை கூறினார்.

சொந்தக்காரங்களே யோசிக்கும் போது
அப்போது குறுக்கிட்ட ஜித்தன் ரமேஷ், சரி இப்போது நாம் டாஸ்க்குக்கு வருவோம் என்று, வீட்டுக்குள் நுழைஞ்சதுமே சாப்டீங்களா சாப்டீங்களா என்று கேட்டீங்க. சொந்தக்காரங்களே அப்படி கேட்க யோசிக்கும் போது, நீங்க ஏன் அப்படி கேட்டீங்க என்றார்.

லெமன் பிரச்சனை
அதற்கு இப்போவும் அதையேதான் நினைக்கிறேன். செய்கிறேன் என்றார் சனம். தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ் சனம் ஷெட்டி மற்றும் அர்ச்சனா இடையிலான லெமன் பிரச்சனை குறித்து பேசினார். அர்ச்சனா ரூடா பேசியதாக 4 பேரிடம் போய் சொன்னதற்கு பதில் அவரிடமே நேரடியாக கேட்டிருக்கலாமே என்றார்.
Recommended Video

நியாயமான வாய்ப்பு
அதற்குள் பஸர் அடிக்க இருவரும் வீட்டுக்குள் சென்றனர். அப்போது ரமேஷிடம் பேசிய கமல் அவருக்கு எத்தனை ஸ்டார் கொடுக்கலாம் என்றார். 4 ஸ்டார் என்று கூறிய ரமேஷ், 4 ஸ்டார்களை கொடுத்தார். அதனை பார்த்த கமல், அவருக்கு கிடைக்க கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார்.

கணக்கை தீர்த்த கமல்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் எவிக்ட்டான தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. இந்நிலையில் கடைசியில் கமல் சனம் ஷெட்டிக்கு கால் டாஸ்க்கை கொடுத்ததை பார்த்த நெட்டிசன்கள், இறுதியாக கணக்கை தீர்த்து அனுப்புகிறீர்களோ என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











