For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது அறியாமலா.. மொட்டை சுரேஷ் மேல கமலுக்கு இன்னும் நம்பிக்கை வரலை போலயே.. அடப்போங்க பாஸ்!

  |

  சென்னை: என்ன நேத்து கமல் சார், மொட்டை சுரேஷ் கேபியோட டாஸ்க் பத்தி பேசவே இல்லையே என ஏகப்பட்ட ரசிகர்கள் கோபித்துக் கொண்டனர்.

  அவங்கள சமாதானம் படுத்தும்படி இப்போ வெளியாகி உள்ள 14ம் நாள் 3வது புரமோ இன்னொரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

  உங்களை அறியாமலே ஒரு நல்லத்தனம் என கமல் கூறியதை கேட்ட ரசிகர்கள், இன்னும் மொட்டை மேல கமலுக்கு நம்பிக்கை வரல போலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அட போங்க சார்.. அதான் நேத்தே ஊர் முழுக்க தெரிஞ்சுடுச்சே.. வெளியானது பிக்பாஸின் அடுத்த புரமோ!

  எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்

  எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கடைசியாக நடைபெற்ற தலைவருக்கான டாஸ்க் பற்றித் தான் கமல் பேசுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக நடந்த குரூபிஸம் பஞ்சாயத்தை பற்றி பேசி அதற்கு ஒரு முடிவு கட்டினார். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்த உடனே கமல் ஏன் பாராட்டவில்லை என ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள்.

  அது சன் டே ஸ்பெஷல்

  அது சன் டே ஸ்பெஷல்

  எல்லாத்தையும் சனிக்கிழமையே சொல்லிட்டா, அப்புறம் சன் டே நிகழ்ச்சியை யார் பார்க்கிறது. அதெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி டைரக்டருக்கு நல்லாவே தெரியும். கேபி, மொட்டை சுரேஷ் தாத்தா பேத்தி பாசத்தை சன் டே ஸ்பெஷலாக வைத்து ரேட்டிங்கை அதிகரிப்பார்கள் என்றும் சில பிக் பாஸ் ரசிகர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

  அப்படி சிரிச்சா என்ன அர்த்தம்

  அப்படி சிரிச்சா என்ன அர்த்தம்

  கேபியோட நண்பர்களான பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜீத் ஆகிய இருவருமே அவருக்காக அந்த தலைவருக்கான டாஸ்க்கில் சப்போர்ட் செய்யாதது வருத்தமாக இருக்கா என கமல் கேட்டதும், தலையை குனிந்து கொண்டு சிரித்த கேபியை பார்த்த கமல், அப்படி சிரிச்சா என்ன அர்த்தம், போட்டு கொடுக்கிறாரே என நினைக்கிறீங்களா என ஓப்பனாக கேட்டார்.

  ஓப்பனா சொல்லிட்டேன்

  ஓப்பனா சொல்லிட்டேன்

  சிரித்த முகத்துடன் தலையை தூக்கிய கேபி, நானே அவங்க கிட்ட ஓப்பனா சொல்லிட்டேன் என்றார். உடனே கமல், பேசி முடிச்சிடுங்க, எனக்கு அது பெரிய தகராறா தெரியல என்றார். ஆஜீத் மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு இந்த முறை எடிட்டர் கரெக்ட்டா க்ளோஸ் அப் போனார். அந்த மியூசிக் தான் ஏன்னே தெரியல.

  தாத்தாவோட ஹெல்த்

  தாத்தாவோட ஹெல்த்

  பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜீத்துக்கு முக்கியத்துவமே கொடுக்காமல், நேரா சுரேஷ் சக்கரவர்த்தி தாத்தா தனக்காக தன்னோட ஹெல்த் கண்டிஷனை எல்லாம் தியாகம் பண்ணது ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு என கமல் கிட்ட கேபி பேசினது நிச்சயம் சுரேஷ் சக்கரவர்த்தி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.

  தெரியாத்தனமா நல்லத்தனம்

  தெரியாத்தனமா நல்லத்தனம்

  சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்து பேசிய கமல், உங்களை அறியாமல் ஒரு நல்லத்தனம் வெளிப்பட்டது என்றதும், லேசா ஒரு புன்னகை புரிந்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக் பாஸ் வீட்டில் எல்லோருடனும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த சுரேஷை கமல் இன்னும் மறக்கவில்லை போல என ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகி எங்களுக்கு வருத்தம் பா என்கிற ரீதியில் தான் இந்த புரமோவை பார்த்து வருகின்றனர்.

  தகப்பனா தாத்தாவா

  தகப்பனா தாத்தாவா

  கேபி உங்களை எப்படி கூப்பிட்டா நல்லா இருக்கும் தகப்பனா, தாத்தாவா எனக் கேட்டதுமே, தாத்தா சார் என சொன்ன சுரேஷ் சக்கரவர்த்தியின் நல்ல மனசை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி, இன்றைய நிகழ்ச்சியில் நடக்க உள்ள அந்த நெகிழ்ச்சி தருணத்தை காண காத்திருக்கின்றனர்.

  எவிக்‌ஷன் ட்ரோல்

  எவிக்‌ஷன் ட்ரோல்

  முன்னதாக பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷனுக்காக கமல் கொடுத்த பில்டப்பை எல்லாம் பார்த்த ரசிகர்கள், இந்நேரம் ரேகா மேடம் வீட்டுல மீன் குழம்பு வச்சி சாப்பிட்டுட்டு இருப்பாரு நம்மவரே, என ஓவராக ஓட்டி பதிவிட்டுள்ள மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.

  English summary
  Bigg Boss Tamil 4 fans gets little dissappoinment over Kamal talks about Suresh, Gabi task in Day 14 Promo 3.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X