காரித்துப்பிய கமல்.. சந்து கேப்பில் சக்கரவர்த்திக்கு ஆப்பு.. அதிர வைக்கும் அடுத்த புரமோ!
சென்னை: ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் நடிகர் கமல்ஹாசன் சக்கரவர்த்தியை விளாசும் புரமோ வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் புரமோ வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையான இன்று நடிகர் கமல்ஹாசன், போட்டியாளர்களை அகம் டிவி வழியாக சந்திக்கிறார்.

தடவிதான் கொடுப்பீர்கள்
இரண்டாவது புரமோவிலேயே, சுரேஷ் சக்கரவர்த்தியையும் ரம்யா பாண்டியனையும் விளாச போவதாக சிக்னல் கொடுத்தார். ஆனால் இதெல்லாம் புரமோவில் மட்டும்தான். நிகழ்ச்சியில் கடுமையாக ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டீர்கள், தடவிதான் கொடுப்பீர்கள் என சாடினர்.

அகம் டிவி வழியாக
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களை அகம் டிவி வழியாக சந்திக்கிறார் கமல்.

விரோதிகள் போல
அப்போது பேசும் கமல், ஒரு சின்ன ஜோக்குல ஆரம்பிச்சு.. தொடர்கதையா போய்க்கிட்டு இருக்கு.. பாதியிலேயே இருந்து பாக்குறவங்களுக்கு இவங்க ரெண்டு பேரும் காலம் காலமா.. தலைமுறை தலைமுறையா விரோதிகள் போல்ருக்குன்னு நினைப்பாங்க..

த்தூ என துப்பிய கமல்
கிட்ட வந்துப் பார்த்தாதான் தெரியும்.. த்தூ.. இவ்வளவு தானா.. என்பார்கள் என்று கூறுகிறார் கமல். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிரிக்க.. துப்புனதுல எச்சில் தெறிக்கலயே சக்கரவர்த்தி என கேட்க என் கோவத்துல சொல்லிட்டேன் என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஆக்ரோஷ ரியாக்ஷன்
அதற்கு கோவத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி பத்து வரை எண்ணு.. எதிர்க்க இருக்கும் ஆள்கிட்ட போயிட்டு நீ அஞ்சு எண்ணு நான் அஞ்சு எண்றேன்.. எனக்கு பத்து வரை எண்ணு பொறுமையில்ல.. என கூறி ஆக்ரோஷமாக ரியாக்ஷன் கொடுக்கிறார் கமல்.

அனிதா சிரிப்பு
கமல் பேச பேச சுரேஷ் சக்கரவர்த்தியின் முகம் வாடுகிறது. ஆனால் அனிதா சம்பத்தின் முகத்தில் புன்னகை கூத்தாடுகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி சாதாரணமாக சொன்னதை பெரிய பிரச்சனையாக்கிய அனிதா சம்பத்தை கமல் ஏதாவது கேட்பாரா தரக்குறைவாக பேசியதற்கு கண்டிப்பாரா என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போதுதான் தெரியும்.


Click it and Unblock the Notifications











