ஆர் யூ ஓகே? தேம்பி தேம்பி அழுத ஷிவானியிடம் நலம் விசாரித்த கமல்.. குறையையும் தீர்த்து வைத்தார்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கதறியழுத ஷிவானியிடம் கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திதத்த கமல் கடந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்களை விசாரித்தார்.

அந்த வகையில் கடந்த வாரம் கன்ஃபெஷன் ரூமில் ஷிவானி கதறியழுதது குறித்து பேசினார். இது தொடர்பாக ஆரம்பித்த கமல் கொஞ்சம் டிஸ்டர்பிங்காக இருந்த சம்பவம் என பேசத் தொடங்கினார்.

ஆர் யூ ஓகே ஷிவானி?

ஆர் யூ ஓகே ஷிவானி?

ஷிவானி கன்ஃபெஷன் ரூமில் நீங்கள் சொல்ல வந்த விஷயங்களை கேவல்கள் மற்றும் விம்மல்களுக்கு இடையில்தான் சொன்னீர்கள். முதலில் நான் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி, ஆர் யூ ஓகே ஷிவானி.. என்று ஷிவானியிடம் நலம் விசாரித்தார்.

சோகம் தாங்கும் தன்மை

சோகம் தாங்கும் தன்மை

தொடர்ந்து பேசிய கமல் உங்களின் சகிப்புத்தன்மை சோகம் தாங்கும் தன்மையை சோதிக்கும் விளையாட்டுதான் இது. அதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் ஷிவானிக்கு மிகப்பெரிய குறை இருந்துச்சுல்ல என்று கேட்ட கமல், ஷிவானியின் பெயரை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.

11 முறை சொல்லிவிட்டேன்

11 முறை சொல்லிவிட்டேன்

இதனால் ஷிவானி உட்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் குழம்பினர். பின்னர் பேசிய கமல் ஷிவானி உங்களின் பெயரை 11 முறை சொல்லிவிட்டேன், இதனால் வீக்கெண்டில் நான் உங்கள் பெயரை சொல்லவில்லை என்ற அந்தக் குறை நீங்கியது.

வீக்கேண்டில் ஒரு குறை..

வீக்கேண்டில் ஒரு குறை..

எந்த போட்டியாளரின் பெயரையும் நான் இத்தனை முறை சொன்னதில்லை அதனால் அந்த தனித்துவத்தையும் ஷிவானியின் பெயர் பெற்றுவிட்டது என்றார். தொடர்ந்து பேசிய கமல், வீக்கேண்டில் மேலும் ஒரு குறை இருந்ததே உங்களுக்கு என்று கேட்டார்.

அதனால என்ன இப்போ?

அதனால என்ன இப்போ?

அதற்கு சேவிங் ஆர்டரில் என் பெயர் வருவதில்லை என்று கூறினார். அதனால என்ன இப்போ சொல்லிடுறேன்
யூ ஆர் சேவ்டு ஷிவானி என்று கூறினார். இதனால் நெகிழ்ந்துப் போன ஷிவானி, இந்த வீட்டில் நான் பிக்பாஸைதான் நம்பி இருக்கிறேன்.

நினைவு படுத்திய கமல்

நினைவு படுத்திய கமல்

அதனால்தான் அவர் 70 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்டதும் உடைந்து அழுதுவிட்டேன். இனிமேல் மன வலிமையுடன் விளையாடுகிறேன் என்றும் கூறினார். அதனைக் கேட்ட கமல், இன்னும் கொஞ்ச நாட்கள்தாள் உள்ளது என்று நினைவுப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X