Kamal: வேட்டையாடு விளையாடு 2 ஸ்க்ரிப்ட் ரெடி... கமல் கால்ஷீட் என்னாச்சு..? காத்திருக்கும் கெளதம்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
கெளதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் ஸ்டோரியாக வெளியான வேட்டையாடு விளையாடு சூப்பர் ஹிட்டானது.
சில தினங்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தின் வெற்றியை கெளதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையுடன் ரெடியாகிவிட்டாராம் கெளதம் மேனன்.

வேட்டையாடு விளையாடு 2 ஸ்கிரிப்ட் ரெடி:கமல் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். போலீஸ் ஸ்டோரியாக உருவான வேட்டையாடு விளையாடு கமல் கேரியரில் இன்னொரு மைல் ஸ்டோன் திரைப்படமாக அமைந்தது.
கெளதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங், கமலின் தரமான ஆக்ஷன் என மாஸ் காட்டியது. 90ஸ் கிட்ஸ்கள் கடைசியாக கொண்டாடிய தரமான போலீஸ் ஆக்ஷன் படம் இதுவாக தான் இருக்க முடியும். இதனால், 2கே கிட்ஸ்களுக்காக வேட்டையாடு விளையாடு படத்தை ரீ-ரிலீஸ் செய்தது படக்குழு. கடந்த மாதம் இறுதியில் வெளியான வேட்டையாடு விளையாடு, இந்த முறையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதல் வாரம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் கல்லா கட்டியது. இதனையடுத்து வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ் வெற்றியை கெளதம் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார் கெளதம் மேனன்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல், வேட்டையாடு விளையாடு 2ம் பாகத்திற்காக கதையுடன் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றார் கெளதம். ஆனால், இன்னும் கதை ரெடியாகவில்லை, கெளதம் ஸ்கிர்ப்ட்டுடன் வந்தால் தானும் அதில் நடிக்க தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். கெளதம் மேனனும் கண்டிப்பாக வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் வரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது வேட்டையாடு விளையாடு 2ம் பாகத்திற்கான கதையை கெளதம் மேனன் எழுதிவிட்டாராம். கமல் ஓக்கே சொன்னால் உடனடியாக படத்தின் மற்ற வேலைகளை தொடங்க ரெடியாகிவிட்டாராம். இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே, KH 233, பிக் பாஸ் என பிஸியாக இருக்கும் கமல், விரைவில் கெளதம் மேனனிடம் கதை குறித்து பேசலாம் என்றுள்ளாராம். இருவரும் சந்தித்த பின்னர் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் குறித்து அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











