டைரக்டருக்கு காஸ்ட்லி கார்...அசிஸ்டென்ட் டைரக்டருக்கு கமல் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

சென்னை : விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாட படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதுவும் காஸ்ட்லியான பரிசுகளை வழங்கி உள்ளார்.

விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடமும் பாசிடிவ் கமெண்ட்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வரும் படமாக இருக்கும் விக்ரம், வசூலையும் குவித்து வருகிறது. நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளது.

Recommended Video

Kamal Gifts A Luxury Car To Lokesh Kanagaraj | இன்ப அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜை *AutoNews
2 நாளில் 100 கோடி வசூல்

2 நாளில் 100 கோடி வசூல்

ரிலீசான நான்காவது நாளில் விக்ரம் படம் இந்தியாவில் மட்டும் 109 கோடி வசூலை கடந்துள்ளது. விரைவில் தமிழகத்திலும் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்து முந்தைய வசூல் சாதனைகளான பீஸ்ட், வலிமை படங்களின் வசூல் சாதனையை விக்ரம் முறியடித்தது. விரைவில் கேஜிஎஃப் 2 படத்தின் சாதனையையும் விக்ரம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷிற்கு காஸ்ட்லி கார்

லோகேஷிற்கு காஸ்ட்லி கார்

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார் கமல். இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் பரவி செம டிரெண்டானது. டைரக்டரை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் காஸ்ட்லி பரிசு வழங்கி உள்ளார் கமல்.

அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு

அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு

விக்ரம் படத்தில் மொத்த 13 பேர் அசிஸ்டென்ட் டைரக்டர்களாக பணியாற்றினர். இவர்கள் அனைவருக்கும் TVS Apache RTR 160 ரக பைக்கை பரிசாக வழங்கி உள்ளார் கமல்ஹாசன். இந்த பைக்கின் விலை ரூ.1.20 லட்சம். இந்த பைக் லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடியதாகும். பார்ப்பதற்கும், ஓட்டுவதற்கும் செம கெத்தாக, ராயல் லுக் கொடுக்கக் கூடிய பைக்.

ஹாட் டாப்பிக் இது தான்

ஹாட் டாப்பிக் இது தான்

அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கும் இந்த காஸ்ட்லி பைக்கை கமல் வாங்கிக் கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சிரயத்தை தந்ததுள்ளது. டைரக்டருக்கு மட்டுமில்லாமல் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் அனைவருக்கும் கமல் பைக் வாங்கிக் கொடுத்தது தான் கோலிவுட்டிலும், சோஷியல் மீடியாவிலும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X