ஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகள் ஒவ்வொருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் கிஃப்ட் கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்டுகளிடம் பேசிய கமல், வெளியே போன பிறகு என்ன பிளான் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் பிளானை கூறினர். அந்த வகையில் ரியோ, காரை எடுத்துக் கொண்டு காட்டுக்கு கிளம்பி விடுவேன் என்றார்.

கமல் கொடுத்த பரிசு

கமல் கொடுத்த பரிசு

இந்நிலையில் இன்று பிக்பாஸின் ஃபினாலேவை முன்னிட்டு ஃபைனலிஸ்டுகளான ரியோ, பாலாஜி, ரம்யா, சோம் மற்றும் ஆரி ஆகிய ஐந்து பேருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் பரிசு கொடுத்தார்.

ரியோவுக்கு டென்ட்

ரியோவுக்கு டென்ட்

அதன்படி காட்டுக்கு போவேன் என்று கூறிய ரியோவுக்கு டென்ட்டை பரிசாக வழங்கினார் கமல். ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த பரிசை எடுத்து வந்த ரியோவிடம், உங்களுக்கு ட்ரெக்கிங் பிடிக்கும் என்பதால் இந்தப் பரிசு உங்களுக்கு என்றார்.

பாலாஜிக்கு தம்பெல்ஸ்

பாலாஜிக்கு தம்பெல்ஸ்

அடுத்து பாலாஜிக்கு குடும்பத்தை பார்க்கப் போகிறீர்களா? அல்லது பரிசு வேண்டுமா என்று கேட்டார் கமல். அதற்கு பரிசுதான் சார். அண்ணனை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி ஸ்டோர் ரூமுக்கு சென்றார். அங்கு பாலாஜிக்கு தம்பெல்ஸை பரிசாக வைத்திருந்தார் கமல். அதனை பார்த்த பாலாஜி, நன்றி சார் இதை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் என்றார்.

ரம்யாவுக்கு ஆர்கானிக் சீட்ஸ்

ரம்யாவுக்கு ஆர்கானிக் சீட்ஸ்

அடுத்தப்படியாக ரம்யாவிடமும் ஃபேமிலியா பரிசா என்றார். அதற்கு என் குடும்பமே உங்களிடம் பரிசு வாங்குவதைதான் எதிர்பார்க்கும். ஆகையால் பரிசு என்று ஸ்டோர் ரூமுக்குள் சென்றார். அங்கு ரம்யாவுக்கு ஆர்கானிக் சீட்ஸ் மற்றும் போன்சாய் மரக்கன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரம்யா இந்த விதைகள் ரொம்ப ஸ்பெஷல் என நன்றி கூறினார்.

ஆரிக்கு டைரி பென்

ஆரிக்கு டைரி பென்

அடுத்து ஆரியும் கமலின் பரிசே முதலில் என்று கூறி ஸ்டோர் ரூமுக்குள் சென்றார். அங்கு அவருக்கு டைரியும் பேனாவும் வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து வந்த ஆரியிடம் உங்களின் சிந்தனைகளை வார்த்தைகளாக்குங்கள் என்று கூறினார் கமல். மேலும் அந்த டைரி மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பர் என்றார். அதனைக் கேட்ட கமல், இதைவிட பெரிய பரிசு ஒன்றும் இல்லை என்று நன்றி கூறினார். நிறைய சம்பவங்கள் நடைபெற வேண்டும், அவற்றை நீங்கள் அதில் குறிப்பிட வேண்டும் என்று வாழ்த்தினார் கமல்.

சோம்க்கு ட்ரம்ஸ்

சோம்க்கு ட்ரம்ஸ்

இறுதியாக சோம சேகருக்கு ட்ரம்ஸ் போன்ற கையால் தட்டும் இசைக்கருவி ஒன்றை பரிசளித்தார் கமல். மேலும் அந்த கருவியின் மீது அமர்ந்து வாசிக்க சொல்லியும் கேட்டார். யாருக்கு என்ன கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணி அசத்தலாக கொடுத்து அசத்தி விட்டார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X