குக்கு டாஸ்க்கை கொடுத்து கொளுத்திப்போட பார்த்த கமல்.. பாலாவின் சீக்ரெட்டை போட்டுடைத்த அனிதா!

சென்னை: குக்கு டாஸ்க்கை கொடுத்து ஹவுஸ்மெட்ஸ்களுக்கு இடையே கொளுத்திப் போட பார்த்தார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதி நாட்களில் ஹவுஸ் மெட்ஸ்களை சந்திக்கும் கமல், சில டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார்.

கமல் கொடுக்கும் டாஸ்க்குகள் பெரும்பாலும் கொளுத்திப் போடும் வகையிலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடிலும் குக்கு டாஸ்க்கை கொளுத்திப் போட பார்த்தார் கமல்.

ஹவுஸ்மெட்ஸ் ரகசியம்

ஹவுஸ்மெட்ஸ் ரகசியம்

அதாவது, ஹவுஸ்மெட்ஸ் ஒவ்வொருவராய் குக்குவின் தொப்பியை அணிந்து டேபிளில் இருந்த சக ஹவுஸ்மெட்டுகளின் போட்டோவின் அடிப்படையில் அவர்களின் ரகசியத்தை சொல்ல வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் ஹவுஸ்மெட்ஸ் தங்களுக்கு வந்த போட்டோக்களை சக ஹவுஸ்மெட்ஸின் ரகசியத்தை கூறினர்.

ஒப்பினியன்

ஒப்பினியன்

அந்த வகையில் முதலில் விளையாடிய ரியோவுக்கு சனம் ஷெட்டியின் போட்டோ வந்தது. இதனை தொடர்ந்து சனம் ஷெட்டியின் ரகசியம் என சனம், எந்த பிரச்சனை என்றாலும் அவங்களோட ஒப்பினியன ஸ்ட்ராங்க ஆடியன்ஸ்கிட்ட சொல்லனும் என்று அந்த இடத்திலேயே முயற்சிப்பார் என்றார்.

ஹியூமர் சென்ஸ்

ஹியூமர் சென்ஸ்

அதனை கேட்ட கமல், இது யாருக்குமே தெரியாத ரகசியமா என்று கேட்டார். ஆமாம் ஐயா என்ற ரியோ சனம் ஷெட்டிக்குள் நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளது சார் என்று கூறி சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து சனம் எல்லாமே விளையாட்டுக்குதான் சொன்னேன் என்றார்.

புரியும் - வெளிப்படுத்தமாட்டார்

புரியும் - வெளிப்படுத்தமாட்டார்

அவரை தொடர்ந்து விளையாடிய சனம் ஷெட்டிக்கு ஜித்தன் ரமேஷின் போட்டோ கிடைத்தது. ரமேஷ் குறித்து பேசிய அவர், நிறைய புரிதல் இருக்கு ஆனா வெளிப்படுத்த மாட்டார். எந்த பிரச்சனை என்றாலும் அப்போது அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வெளிப்படுத்துவார் என்றார்.

சோமுக்கு ரம்யா

சோமுக்கு ரம்யா

அடுத்து விளையாட வந்த சோம சேகருக்கு ரம்யாவின் போட்டோ வந்தது. அப்போது ரம்யா பத்தின ரகசியம் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தார் சோம். அப்போது சாஃப்ட் ஹர்ட் என்று சொல்லுங்கள் என்று எடுத்துக் கொடுத்தார் ரம்யா.

வாழைப்பழத்துல ஊசி

வாழைப்பழத்துல ஊசி

அதனை தொடர்ந்து சிரிச்சுக்கிட்டே எல்லாத்தையும் சொல்லிவிடுவார், வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி சொல்லி விடுவார். அவர் சிரித்துக்கொண்டே சொல்வதால் நாங்களும் சிரித்துக் கொண்டே போய்விடுவோம் என்றார்.

எமோஷனலான பையன்

எமோஷனலான பையன்

அவரை தொடர்ந்து அனிதா விளையாடினார். அவருக்கு பாலாவின் போட்டோ வந்தது. பாலா குறித்து பேசிய அனிதா, பார்க்கதான் அரோகென்ட்டா இருப்பது போல் தோன்றும். பாலா எமோஷனலான பையன், சாஃப்ட்டான பையன். அவர் தான் வின்னர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

தலைக்கு மசாஜ்

தலைக்கு மசாஜ்

இதுதான் ரகசியமான என கமல் கேட்க, ஒரு விஷயத்தை சொல்ல முடியாமல் பயந்தார். நீங்கள் சொல்ல பயப்படும் அந்த விஷயம் என்ன என்று கேட்டார் பாலாஜி. அதற்கு, சிரித்து மழுப்பிய அனிதா, சார் அவருக்கு யாராவது தலையில் மசாஜ் செய்தால்தான் தூக்கம் வரும் என்று சொல்லியிருக்கார் என்றார்.
அதனைக் கேட்ட கமல், அப்படி செய்துதான் முடியை வளர்த்தீங்களா என்று பாலாஜியை கிண்டலடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X