தலைவர்173 படத்திலிருந்து சுந்தர் சி விலகியது ஏன்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. கமல்ஹாசன் ஓபன் டாக்!
சென்னை: ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து நடிகர் கமல் விமானநிலையத்தில் பேசி உள்ளார்.
ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவம்பம் 5ந் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப் படங்களும் வெளியிடப்பட்டன.

விலகி சுந்தர் சி: சுந்தர் சி இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரி அளவில் பெற்றி பெற்றதால், இந்த படத்தில் அடுத்து சுந்தர்.சியும் ரஜினிகாந்தும் இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சுந்தர் சி திடீரென வெளியிட்ட அறிக்கையில். தவிர்க்க முடியாத காரணங்களால் 'தலைவர் 173' படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி சாரை இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக் கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம் என பதிவிட்டு விலகினார். ரஜினி படத்தை இயக்குவதற்காக பல இயக்குநர்கள் தவம் கிடக்கும் போதும், சுந்தர் சி விலகியதற்கான காரணம் என்ன என சோஷியல் மீடியாவில் பெரும் பேசு பொருளானது.
கமல் விளக்கம்: இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பி கமல், செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார். அதில், விலகியதற்கான காரணத்தை சுந்தர் சி அவர்கள் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். நான் படத்தின் தயாரிப்பாளர் என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்கு கதை பிடிக்கும் வரை அனைவரிடமும் கதை கேட்டுக் கொண்டே இருப்போம். கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குனராக இருந்தாலும் அவர்களிடம் கதை கேட்போம். ஆனால், கதை நன்றாக இருக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் பேசி உள்ளார்.
#Kamalhaasan about #Thalaivar173 :
— Laxmi Kanth (@iammoviebuff007) November 15, 2025
"I'm an Investor.. I need to choose story which my star likes.. We'll keep on searching till we find the one he likes..🤝 We are also searching for another story to act together.. Expect the unexpected.."🔥
pic.twitter.com/LqGgpt3ktx


Click it and Unblock the Notifications











