சத்தமில்லாமல் கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!

கவின், லாஸ்லியா உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் விருந்து கொடுப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Kondattam : மேடையை தெறிக்க விடும் முகேன்,கவின் நடனம்

சென்னை: கவின், லாஸ்லியா உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் விருந்து கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

கடந்த சீசன்களில் இருந்து பிக் பாஸ் சீசன் 3 ரொம்பவே வேறுபட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கவின் லாஸ்லியா காதலுக்கும், கவின் சாண்டி நட்பிற்கும் ரசிகர்கள் ஏராளம். அதனாலேயே நிகழ்ச்சி முடிந்து இருவாரங்களுக்கு மேலான போதும் கூட இன்னமும் ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகென் என முக்கிய போட்டியாளர்களின் ஒவ்வொரு பதிவுகளையும் அவர்கள் வைரலாக்கி வருகின்றனர். நேற்றும் கூட அஜித், விஜய்க்கு நிகராக கவினின் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டிங்கானது.

கமல் கொடுத்த விருந்து

கமல் கொடுத்த விருந்து

இந்நிலையில் கவின் லாஸ்லியா சாண்டி மற்றும் அபிராமிக்கு கமல் விருந்து கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கவிலியா ஆர்மியினர் அப்புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

போட்டோஷாப் செய்யப்பட்டது

போட்டோஷாப் செய்யப்பட்டது

உண்மையில் அப்புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒன்று தான். கமல் யாருக்கும் விருந்து கொடுக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மீது அதீத பாசம் கொண்ட யாரோ ஒரு தீவிர ரசிகர் பார்த்த வேலையாக தான் இது இருக்க வேண்டும்.

இலங்கையில் லாஸ்லியா

இலங்கையில் லாஸ்லியா

மற்றொருபுறம் லாஸ்லியா தற்போது தமிழ்நாட்டிலேயே இல்லை. மீண்டும் இலங்கை சென்றுவிட்டார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினும், லாஸ்லியாவும் மீண்டும் சந்தித்து கொண்டதாகவே தெரியவில்லை. எனவே ரசிகர்கள் தங்களது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இப்படி ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் போலும்.

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கொண்டாட்டம்

கடந்த வாரம் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது கவினும் லாஸ்லியாவும் தனித்தனியே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அதில் கவின் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் அமர்ந்திருந்தார் என ரசிகர்கள் கமெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X