வெந்து தணிந்தது காடு ஆடியோ ரிலீசில் கமல்.. வேட்டையாடு விளையாடு 2 அறிவிப்பு?
சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Recommended Video
இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

4வது முறையாக கூட்டணி
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம் படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 15ல் ரிலீஸ்
படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் இன்னும் மூன்று தினங்களில் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் செட் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ்
இந்தப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான உடல் இளைத்த சிம்புவை பார்க்க முடிகிறது. மேலும் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இருவேறு கெட்டப்புகள்
இந்தப் படத்தில் கிராமம், நகரம் என இருவேறு இடங்களில் பயணிக்கும் சிம்புவை பார்க்க முடிகிறது. படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டில் நடிகர் கமல் மற்றும் உதயநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு நேரில் அழைப்பு
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். மேலும் இந்த விழாவில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை கௌதம் மேனனே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











