Kamal: ட்ராப் ஆகிறதா கமலின் KH 233.. H வினோத் எடுத்த அதிரடி முடிவு.. க்ரீன் சிக்னல் கொடுத்த கார்த்தி

சென்னை: கமலின் 233வது படத்தை இயக்கவிருந்தார் ஹெச் வினோத். ஆனால், இப்போது வரை KH 233 படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது உறுதியாகவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கார்த்தியின் தீரன் அதிகாரம் இரண்டில் இணைய ஹெச் வினோத் முடிவு செய்துள்ளாராம்.

கமலால் H வினோத் எடுத்த அதிரடி முடிவு
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநரானவர் ஹெச் வினோத். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் ஜானரில் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான தீரன், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கார்த்தியும் ஹெச் வினோத்தும் கூறியிருந்தனர்.

 Kamal: H Vinoth has decided to Start Karthis Theeran Adhigaaram Irandu

அதன் பின்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களில் இணைந்த வினோத், அடுத்து கமலின் KH 233 படத்தில் கமிட்டானார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி நடிக்கலாம் என சொல்லப்பட்டது. மேலும், KH 233 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் H வினோத் பிஸியாக இருப்பதாக சொல்லப்பட்டது. இதனிடையே கமல்ஹாசனும் இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், கமல் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி இந்தக் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. இதனை முடித்துவிட்டு தான் H வினோத் படத்தில் நடிக்கவுள்ளாராம் கமல். அதனால் KH 233 ஷூட்டிங் 2025 ஆம் ஆண்டு தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

எனவே அதற்குள்ளாக தீரன் அதிகாரம் இரண்டு படத்தை முடிக்க ரெடியாகிவிட்டாராம் வினோத். அதற்கு கார்த்தியும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனடியாக தீரன் அதிகாரம் இரண்டு படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கிய வினோத், அடுத்தாண்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளாராம். இதுவும் தீரன் அதிகாரம் முதல் பாகம் போல உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகும் எனத் தெரிகிறது.

இப்போதைக்கு கமலின் KH 233 ப்ராஜெக்ட் 2025ல் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படம் திடீரென ட்ராப் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் ஹெச் வினோத் கார்த்தியின் தீரன் அதிகாரம் இரண்டு படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X