ஆரம்பிக்கலாங்களா.. கறி விருந்து போட்டு.. கிடா வெட்டப் போகும் கமல்.. டைட்டில் என்ன தெரியுமா?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் உருவாகி வரும் கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி மிரட்டி வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் அந்த கெட்டப் இந்த படத்திற்கான கெட்டப் என்பது தற்போது தரமான சம்பவமாக வெளியாகி இருக்கும் டீசர் மூலம் தெரிகிறது.

பிறந்தநாள் பரிசு
நடிகர் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பரான பிறந்தநாள் பரிசை கமல் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக கமல் டிபியை வெளியிட்ட அவர், இன்று கமல்ஹாசனின் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

யாரென்று தெரிகிறதா
மாஸ்டர் படத்தை முடித்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படம் இயக்க உள்ளார் என்கிற தகவல்கள் வெளியானது. அதன் பின்னர், கமல்ஹாசனை வைத்து தான் லோகேஷ் படம் இயக்குகிறார் என்றும், யாரென்று தெரிகிறதா? என்ற டைட்டிலில் ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.

விக்ரம்
இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் அதுவுமா அவரது ரசிகர்களுக்கு அட்டகாச விருந்தை கொடுக்கும் விதமாக தற்போது வெறித்தனமான டைட்டில் டீசரை இறக்கி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேலும், படத்திற்கு ‘விக்ரம்' என அட்டகாசமான டைட்டில் வைத்துள்ளார்.

ஏற்கனவே
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கடந்த 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம். அதே டைட்டிலில் தற்போது புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது ரிவீல் ஆகி ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுத்துள்ளது. மேலும், டைட்டில் டீசரில் ஆண்டவரின் தரிசனம் கிடைத்ததை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆரம்பிக்கலாங்களா
ரமணா பட பாணியில், அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், ரவுடிகள் என அனைவரையும் ஒரு அறைக்குள் முகமூடி போட்டு கொண்டு வந்து, எல்லோருக்கும் தலை வாழை இலையில் கறி விருந்து போட்டு, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் கமல், அந்த வீட்டில் ஏகப்பட்ட துப்பாக்கிகளையும், கத்திகளையும் ஒளித்து வைப்பதும், ஆரம்பிக்கலாங்களா என கடைசியில் கேட்பதும் வேற லெவல் காட்டுத் தனம். வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications











