Indian 2: ஜவ்வு போல இழுத்துக்கொண்டே போகும் இந்தியன் 2.. புலம்பும் இயக்குநர்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் ஜவ்வு போல இழுத்துக்கொண்டே போவதால், கமல்ஹாசனின் 233வது படத்தை தொடங்க முடியாமல் தவித்து வருகிறார் எச் வினோத்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால், படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நொந்துப்போனார்கள்.

Kamal haasan 233 movie director H vinod upset because of indian 2 delay

படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2: பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு முடியவில்லை: சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இப்படத்துக்கான டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்தது.அண்மையில் கமல் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவெளியிட்டு இருந்த நிலையில்,படத்தின் மேலும், சில காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

புலம்பும் இயக்குநர்: இதனால், கமலஹாசனின் 233வது படத்தின் வேலைகள் தொடங்க முடியாமல் உள்ளது. அடுத்த மாதம் கமலின் பிறந்த நாள் அன்று படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என எச் வினோத் நினைத்திருந்த நிலையில், இன்னும் அதற்கான முதல் படியை எடுத்து வைக்க முடியாமல் தவித்து வருகிறார் எச் வினோத். இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

கமலில் 233வது படம்: இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்காக கமல்ஹாசன் கதை வடிவமைத்துள்ளார். இயக்குநர் எச் வினோத், எழுதி, இயக்கவுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்சின் 52 ஆவது படமாக இது உருவாகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X