அதிரடியாக தயாராகும் கமல் 233.. செய்யாறு பாலு சொன்ன கமலின் ரகசிய பிளான்!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை எச் வினோத் இயக்குவது உறுதியான நிலையில், படம் குறித்து மாஸ்டர் பிளான் ஒன்றை கமல் போட்டுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இதன் படப்பிடிப்பில் கமலின் போர்ஷன் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் வெற்றி: உலகநாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து விக்ரம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் கமல், அடுத்தடுத்த படங்களை இயக்குவதிலும், அடுத்து விக்ரம் போன்று மற்றுமொரு ஹிட் திரைப்படத்தை கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்.

Kamal Haasan 233 movie secret plan told by Cheyyar Balu

கதையில் சில மாற்றம்: எச் வினோத்தின் முந்தை படங்களால் ஈர்க்கப்பட்ட கமல் தனது 233 படத்திற்கு எச் வினோத்தை இயக்குநராக்கி உள்ளார். படத்தின் திரைக்கதை எச்.வினோத் தயார் செய்து கமல்ஹாசனிடம் காட்டி உள்ளார். அதில் சில மாற்றங்கள் செய்ய கமல் அறிவுறுத்தியதால் அந்த வேலையில் எச் வினோத் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தயாரிப்பில் மும்முரம்: இந்நிலையில், பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, கமலின் 233படம் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். அதில், கமல் தற்போது தயாரிப்பில் பரபரப்பாக இருக்கிறார். SK21 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிம்பு 48 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல தனுசை வைத்து ஒரு படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தரமான சம்பவம்: மணிரத்னமும் கமலும் இணையும் படம் தான் அடுத்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களால் ஈர்க்கப்பட்ட கமல், எச் வினோத்ரிற்கு ஒகே சொல்லி இருக்கிறார். எச் வினோத்தின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் ஒரு முக்கிய சமூக கருத்தை கொண்ட படமாகத்தான் இருக்கும்.

விரைவில் படப்பிடிப்பு: மேலும், கமல்ஹாசனுடைய மாஸ்டர் பிளான் என்னவென்றால், இந்தியன் 2 வெளியாகி அந்த பரபரப்பு இருக்கும் போது, 233 படத்தை வெளியிட திட்டம் போட்டுள்ளார். ஏன் என்றால் இந்தியன் 2 படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த ஹாப்போடு இந்த படத்தை வெளியிட்டால், 233படத்திற்கு நல்ல ஓபனிங் மற்றும் வியாபாரம் கிடைக்கும் என்று மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறார் கமல். மேலும், கமல் 233 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X