ஷிவானிக்கு வக்கீலாக மாறிய கமல்.. வீடியோ காலில் ஷிவானி அம்மா.. திட்டாமல் திருத்தியது சூப்பர்!

சென்னை: இந்த வாரம் ஷிவானி அம்மா வந்து போனது தான் ஹைலைட்டாக இருக்கப் போகிறது என்று பார்த்தால், வெள்ளிக்கிழமை நிலைமையே மாறிடுச்சு.

Recommended Video

Bigg Boss சனிக்கிழமை Episode, Aari செய்தது தப்பு | Kamal Hassan

ஞாயிற்றுக் கிழமை விவாதிக்க வேண்டிய விஷயங்களை அவசர அவசரமாக சனிக்கிழமை எபிசோடிலேயே பேச வேண்டியதாக ஆகிவிட்டது.

ஷிவானி அம்மாவை வீடியோ காலில் அழைத்து பேசிய கமல்ஹாசன் ஷிவானிக்கு வக்கீலாக மாறி வாதாடினார்.

ஆயா வேலை செய்யவா

ஆயா வேலை செய்யவா

இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் சிறப்பாக களைகட்டியது. முதல் நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானி அம்மா, ஷிவானியை சும்மா கிழித்துத் தொங்க விட்டார். ஆயா வேலை செய்யவா இங்க வந்த, தினமும் பாட்டுப் போட்ட எந்திரிக்க அவனுக்கு தெரியாதா? நீதான் போய் எழுப்பணுமா? என விளாசினார்.

அறஞ்சிடுவேன்

அறஞ்சிடுவேன்

ஷிவானி அம்மா இப்படி பேசியதும் திருப்பி பேச முடியாமல், அம்மாவை கன்வின்ஸ் பண்ண முடியாமல் கதறி அழுதுவிட்டார். மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஷிவானியின் அம்மா, சொந்தக்காரங்களா எப்படி பேசுறாங்க தெரியுமா, வெளியில தலை காட்ட முடியல, வர கோபத்துக்கு உன்னை அப்படியே அறஞ்சிடுவேன் என ருத்ர காளியாகவே மாறினார்.

ரொம்ப தப்பு

ரொம்ப தப்பு

ஷிவானி அம்மா வந்து ஷிவானியை அப்படி திட்டிவிட்டு சென்றது ரொம்ப தப்பு என்றும் இது பெற்றோர் செய்யும் வன்கொடுமை இதை ஆதரிக்க முடியாது என்று இயக்குநர் சி.எஸ். அமுதன், சின்மயி உள்ளிட்டோர் ஷிவானி அம்மாவின் செயலுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.

ஷிவானியை விட சிறப்பு

ஷிவானியை விட சிறப்பு

ஷிவானியை விட அவங்க அம்மா சரியான போட்டியாளராக மாறிட்டாங்க என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள், ஷிவானி அம்மாவை சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஏகப்பட்ட மீம்களும், ஓடி ஒளிந்த பாலாவையும் விடாமல் மீம் போட்டு வெறுப்பேற்றி விட்டனர்.

ஷிவானிக்கு பாராட்டு

ஷிவானிக்கு பாராட்டு

இந்நிலையில் சனிக்கிழமை எபிசோடில் ஷிவானியை கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். அம்மா வந்து அவங்க கோபத்தையும் கண்டிப்பையும் கொட்டி விட்டுச் சென்ற நிலையில், நீங்கள் எதிர்த்து பேசியிருந்திருக்கலாம். நீங்க பேசக் கூடிய ஆள் தான். ஆனால், அம்மாவுக்கு மரியாதை கொடுத்ததற்கு பாராட்டு என்று ஷிவானியை கூல் படுத்தினார்.

ஷிவானி அம்மா வீடியோ கால்

ஷிவானி அம்மா வீடியோ கால்

பின்னர், ஷிவானியை அம்மாவை வீடியோ காலில் அழைத்து அவங்க கிட்டயே பஞ்சாயத்து பண்ணிடுவோம் என மீண்டும் ஷிவானியின் மேட்டரை இழுத்துப் பேச ஆரம்பித்தார். மறுபடியும் அம்மாவா என கொஞ்சம் உள்ளுக்குள்ள ஷிவானிக்கு பயம் ஏற்பட்டது முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

ஷிவானியின் வக்கீல்

ஷிவானியின் வக்கீல்

உடனே ஷிவானியிடம் நான் இப்போ உங்க வக்கீலாக உங்க அம்மா கிட்ட வாதாட போறேன் என அவரது பயத்தை தெளிய வைத்தார். ஷிவானி அம்மாவிடம் பேசிய கமல், உங்க கோபத்தை நீங்க கொட்டியது நியாயமாகவே இருந்தாலும், இப்படி வளர்ந்த ஒரு பெண்ணை பொதுவெளியில் அப்படி திட்டினால், அவருக்கு பாதிக்காதா என்றார்.

திட்டாமல் திருத்தினார்

திட்டாமல் திருத்தினார்

அப்படியே, பைனல்ஸுக்கு உங்க பொண்ண அனுப்ப கொஞ்சம் உசுப்பேத்தி விட்டு போயிருக்கீங்கன்னே நான் நினைக்கிறேன் என செமையா சமாளிச்சு, ஷிவானி அம்மாவை திட்டாமல் திருத்தினார். தெலுங்கில் கொஞ்சம் ஆறுதலாக பேசுங்கள் என கமல் சொல்ல, ஷிவானி அம்மா தனது மகளை சமாதானப்படுத்த ஆரம்பித்தார். சண்டையை ஆரம்பித்து பிக் பாஸ் வைப்பதும், அதை சமாதானப்படுத்தி வைக்கும் வேலையை கமல் செய்வதுமாகவே இந்த ஷோ செல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X