நல்லா நடிக்கிற.. பிறகு ஏன் இப்படி செய்யுற?.. வெள்ளி விழா நாயகன் மோகனுக்கு உலக நாயகன் கொடுத்த அட்வைஸ்
சென்னை: மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருகும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இதில் அவருக்கு முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் ஹாசன் தனக்கு செய்த அட்வைஸ் குறித்து மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையி பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோகன் திடீரென்று காணாமல் போனார்.

முன்னணியில் மோகன்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
ரஜினி, கமலுக்கு டஃப்: கமல் ஹாசன் ஹீரோவாக நடித்த கோகிலா படத்தில் அறிமுகமான மோகன் ஒருகட்டத்தில் கமலுக்கே போட்டியாக வளர்ந்தார். அதேபோல் ரஜினிக்கும் டஃப் கொடுக்க ஆரம்பித்தார். முக்கியமாக மோகன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருப்பவை. அதேபோல் பாடலில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷெனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனாலேயே அவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.
சினிமாவிலிருந்து விலகல்: இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படம் இன்று வெளியாகியிருக்கிறது.
மோகன் பேட்டி: இந்நிலையில் மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கோகிலா படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு சில நாட்களுக்கு நான் ஷூட்டிங் செல்லவில்லை. ஏனெனில் அப்போது எனக்கு எப்போது ஷூட்டிங் என்றே தெரியாது. அந்த நாட்களில் கமலுடன் நடிக்க வேண்டிய காட்சிகள் வேறு இருந்திருக்கிறது. நான் வராததால் கமலும் காத்திருந்திருக்கிறார். பிறகு எனக்கு தந்தி போட்டு வரவழைத்தார்கள். பதறியடித்து சென்ற நான் பாலுமகேந்திரா சாரிடம் பேசவே இல்லை.
அப்போது என்னிடம் வந்த கமல் ஹாசன், நன்றாக நடிக்கிறாய் பிறகு ஏன் இப்படி செய்யுற என்று கேட்டார். அதற்கு நானோ, இல்லை சார் எனக்கு ஷூட்டிங் என்றே தெரியாது என்று கூறினேன். உடனே அவர், ஒரு டைரி வைத்துக்கொள்; என்னென்னைக்கு ஷூட்டிங் என்று அதில் குறித்துவைத்துக்கொள் என்று சொனனர். அதன்படியே செய்தேன். அன்றிலிருந்து ஒருநாள்கூட நான் கால்ஷீட் குழப்பியதே இல்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











