கமல் முன்னிலையில் சிபியிடம் எகிறிய அக்ஷரா.. மரியாதை இல்லாமல் பேசாதீங்க.. தடுத்து நிறுத்திய கமல்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 6 வாரத்தை கடந்துள்ளது. இதில், இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர்.

இதில், அக்ஷரா, பவானி, சிபி, இமான் அண்ணாச்சி, அபினய் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மதுமிதா வெளியேறியதாக கமல்ஹாசன் கூறினார்.

கண்டித்தார்

கண்டித்தார்

பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை மற்றும் நேற்றும் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கமல் கேட்டு வருகிறார். பொம்மை டாஸ்க்கின் போது நிரூப் மற்றும் வருண் இருவரும் பொம்பளை பின்னால் ஒளிந்து கொள்கிறாய், பொம்பளை வச்சி ஜெயிக்க பாக்குற என இருவரும் பேசி இருந்தனர். இதுபோன்ற வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்தக்கூடாது என்று இருவரையும் கண்டித்தார்.

விளக்கம் கேட்ட கமல்

விளக்கம் கேட்ட கமல்

இதையடுத்து, சிபி மற்றும் அக்ஷரா கெட்ட வார்த்தை பேசி சண்டை போட்டுக்கொண்டது குறித்து இருவரிடத்திலும் விளக்கம் கேட்டார். விளக்கம் கொடுக்கிறேன் என்று ஒருவரை ஒருவர் தங்கள் தரப்பு நியாயத்தை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர்.

கமலின் முன் வாக்குவாதம்

கமலின் முன் வாக்குவாதம்

ஒரு கட்டத்தில் இருவரும் கமலில் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சிபி, ஆங்கிலத்தில் கேட்டவார்த்தை பேசினால் தவறில்லை என்று அக்ஷரா கூறியதாக சொன்னார். அப்போதும் சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட அக்ஷராக நான் அப்படி சொல்லவில்லை என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மரியாதை இல்லாத செயல்

மரியாதை இல்லாத செயல்

இதையடுத்து, அவர்களின் சண்டையை ஒரு அதட்டு அதட்டி நிறுத்திய கமல்ஹாசன், கேட்டவார்த்தை எந்த மொழியில் பேசினாலும் தவறுதான் என்றார். மேலும், என் முன்பே இதுபோன்ற கருத்து மோதலில் ஈடுபடுவது மரியாதை இல்லாத செயல் என்பதை நேரடியாக சொல்லாமல் சுற்றிவளைந்து கூறினார். மேலும், யாரிடமும் மரியாதை இல்லாமல் பேசிவிடக்கூடாது. இந்த பழக்கத்தை 5 வருடம் நீங்கள் செய்து பாருங்கள் பின் அதுவே உங்களின் குணமாக மாறிவிடும் என்று இருவருக்கும் அறிவுரை கூறினார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X