Don't Miss!
- News
ட்விஸ்ட்.. அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஓபிஎஸ்சும் இருக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
- Sports
"கோலியின் நடுவிரல் முதல்.. ஹர்பஜனின் தடை வரை" பார்டர் கவாஸ்கர் கோப்பை ஏன் முக்கியம்?.. 5 சர்ச்சைகள்
- Finance
பிட்ச் கொடுத்த அப்டேட்.. சற்றே நிம்மதியடைந்த அதானி.. ஏன் தெரியுமா?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நரம்பு புடைக்க கத்தி பேசுறீங்க ஷிவின்.. கமல் கொடுத்த நோஸ் கட்.. விக்ரமன், கதிருக்கு என்ன சொன்னார்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 84வது எபிசோடுக்கான 3வது ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த சீசனை இன்னும் 20 நாளில் முடித்து விடுங்கள் என ரசிகர்கள் கெஞ்சும் அளவுக்கு படு போராக சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
வார நாட்கள் எபிசோடுகளை விட வர வர வீக்கெண்ட் எபிசோடுகள் இன்னமும் சோதிக்காதீங்கடா என்னய்ய என்பது போலத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கமல்ஹாசன் முடிந்த வரை நிகழ்ச்சியை காப்பாற்ற வீக்கெண்ட் எபிசோடுகளில் போட்டியாளர்களை வைத்து முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் அடிப்பது போல புது புது டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 6: ஷிவின் தான் சூப்பர் ஸ்டார்... விக்ரமனை கட்டிப் பிடித்து அழுத மணிகண்டன்

எவிக்ஷன் லீக்கான பிறகு
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு மணிகண்டன் தான் வெளியேறுகிறார் என்கிற சுவாரஸ்ய விஷயமே லீக்கான பிறகு சன்டே எபிசோடு ரொம்பவே போர் அடிக்கிறது. பிக் பாஸ் டீமும் நிகழ்ச்சியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்பதற்காக சேவிங் ஆர்டரை தாறுமாறாக மாற்றி பார்த்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது போல போட்டியாளர்கள் பர்ஃபார்ம் பண்ணவே ரொம்ப கூச்சப்படுகின்றனர்.

நரம்பு புடைக்க
ஷிவின் தான் பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் இங்கே ஒரு பட்டம் கொடுத்து இன்னொரு பிரச்சனையை கிளப்பிவிட முயற்சி செய்தாலும் வெளியே அதை பெரிதாக யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், உங்களை பற்றி ஏதாவது கேட்க வேண்டும் என்றால் என்னிடம் ரகசியமாக கன்ஃபெஷன் ரூமில் கேட்கலாம் என கமல் சொல்ல, நான் ரொம்ப கத்துறேனா சார் என ஷிவின் கேட்க ஆமாம்.. நரம்பு புடைக்க கத்துறீங்க.. ஆனால், அதற்காக நீங்கள் போலியாக இருக்க வேண்டாம் என நோஸ் கட் செய்வது போல பளிச்சென பதில் அளித்து விட்டார். ஷிவின் எதற்கு எடுத்தாலும் அதிகம் கத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியிலும் உள்ளன.

அப்பாவை போல ஜாலியா இருங்க
அடுத்து விக்ரமன் கன்ஃபெஷன் ரூமில் அமர்ந்து கொண்டு பேசும் போது அம்மா என்கிட்ட எல்லாரிடமும் ஜாலியா பழகுன்னு ஒரு வார்த்தை சொன்னாங்க சார் என்றதுமே.. உங்க அப்பா எவ்ளோ ஜாலியா இருக்காரு.. நீங்களும் அப்படித்தான் ஊருடன் ஒத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என விக்ரமனுக்கும் அதிரடி அட்வைஸை கொடுத்துள்ளார்.

சண்டை நடக்கவே கூடாதாம்
சண்டை நடக்கவே கூடாதுன்னு தான் சார் நான் நினைக்கிறேன் என கதிர் பேச, பிக் பாஸ் ஷோவுக்கே வேட்டு வைப்பது இவர் போன்ற ஆட்கள் தான் என நினைத்துக் கொண்ட கமல் எல்லோர் விருப்பமும் அதுதான். ஆனால், நடந்து கொண்டே இருக்கே.. இருக்குற இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டாமா என கதிருக்கும் எப்படி விளையாட வேண்டும் என்கிற டிப்ஸ் கொடுத்துள்ளார்.