Oscar Museum - ஆஸ்கர் நாயகனுடன் ஆஸ்கர் மியூசியம் சென்ற உலக நாயகன்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: Oscar Museum (ஆஸ்கர் மியூசியம்) ஆஸ்கர் மியூசியத்துக்கு கமல் ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக சென்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து இந்தியன் 2வில் தற்போது நடித்திருக்கிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் அந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு அந்தப் படம் உருவாகிவருகிறது.

சினிமாவில் பிஸி: நடிப்பதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் கமல். அந்தவகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தையும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரித்துவருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ர்தீப் ரங்கநாதன் இயக்கும் படத்தையும் அவர் தயாரிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
வில்லன் அவதாரம்: ஹீரோவாக மட்டும் நடித்துவந்த கமல் ஹாசன் தற்போது வில்லன் அவதாரமும் எடுத்திருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவர் மட்டுமின்றி அந்தப் படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.
அடுத்த படங்கள்: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் கமல். அதுதொடர்பான அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் கமல் ஹாசன் படுபிஸியாக இருப்பதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துவருகின்றனர்.

ஆஸ்கர் மியூசியத்தில்: இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கமல் ஹாசன் ஆஸ்கர் மியூசியத்துக்கு சென்றார். அங்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசித்த அவர் காட்ஃபாதர் படத்தையும் பார்த்து ரசித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. மணிரத்னம் - கமல் இணையும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார். அவரது இசையமைப்பில் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, பத்து தல, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அடுத்ததாக அவரது இசையமைப்பில் அயலான் படம் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











