நாயகன் உடன் மாலிக்.. விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் க்ளிக் செய்யப்பட்ட சூப்பர் செல்ஃபி.. வேற லெவல்!

சென்னை: கமல்ஹாசன் உடன் பகத் ஃபாசில் எடுத்துக் கொண்ட சூப்பர் செல்ஃபி இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பகத் ஃபாசில் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை நடிகர் பகத் ஃபாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

விக்ரம் ஷூட்டிங்

விக்ரம் ஷூட்டிங்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என தேசிய விருது வென்ற நடிகர்கள் இணைந்து நடித்து வரும் விக்ரம் படம் அதிரடியாக உருவாகி வருகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி வைரலானது.

மாலிக்

மாலிக்

பகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவான மாலிக் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான காட் ஃபாதர், தமிழில் வெளியான நாயகன் கதை போலவே மாலிக் படத்தின் கதையும் இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்.

நாயகன் உடன் செல்ஃபி

நாயகன் உடன் செல்ஃபி

இந்நிலையில், நாயகன் படத்தில் நடித்த கமல்ஹாசன் உடன் மாலிக் நடிகர் பகத் ஃபாசில் எடுத்துக் கொண்ட சூப்பர் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. நடிகர் பகத் ஃபாசில் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஆரம்பிக்கலாங்களா என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

நயன்தாராவுடன்

நயன்தாராவுடன்

தமிழில் விக்ரம் படத்தில் நடித்து வரும் பகத் ஃபாசில் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பாட்டு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X