KH233: ஹெச் வினோத் ஸ்கிரிப்ட் ரெடி.. கமல்ஹாசன் புது படம் சூட்டிங் எப்ப தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள KH233 படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக கமல்ஹாசனுக்காக ஹெச் வினோத் சிறப்பான ஸ்கிரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் பிசியாக உள்ள நிலையில், இந்த சூட்டிங் நிறைவடைந்தவுடன் ஹெச் வினோத் இயக்கத்தில் அவர் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.
கமல் -ஹெச் வினோத் படத்தின் சூட்டிங் அப்டேட்: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். சென்னை, திருப்பதி, தைவான், ஆப்ரிக்கா போன்ற உலகின் பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படம் முதல் பாகத்தை போலவே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, இடையில் விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் முடக்கப்பட்டது. இந்நிலையில், விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும் கமல்ஹாசன் துவங்கியுள்ளார். கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடர்ந்து சிறப்பான திட்டமிடலுடன் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில்தான் என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் படத்தை அவர் தயாரித்து வருகிறார். இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்காக ஹெச் வினோத் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி கமலிடம் கொடுத்ததாகவும், தற்போது அதையொட்டி ஹெச் வினோத் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங், இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கமலின் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் முன்னதாக கமல்ஹாசனுடன் இரண்டு படங்களிலும் ஹெச் வினோத்துடன் இரு படங்களிலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











