47 ஆண்டுகளை கடந்த நட்பு.. ரஜினியை வீட்டில் சென்று சந்தித்த கமல்ஹாசன்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையொட்டி பல பிரமோஷன் பணிகளில் கமல் மற்றும் படக்குழு ஈடுபட்டு வருகிறது. பல்வேறு பேட்டிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு என களைகட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது சிறப்பான சம்பவமாக கமல் தன்னுடைய 47 ஆண்டுகால நண்பரை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கான புக்கிங்குகள் துவங்கியுள்ளன. இன்னும் 5 நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வரும் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களில் கேரளா, சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் தன்னுடைய பிரமோஷன் பணிகளை கமல் உள்ளிட்ட படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ரஜினியை சந்தித்த கமல்

ரஜினியை சந்தித்த கமல்

நேற்றைய தினம் மும்பையில் தனது பிரமோஷன் பணிகளை கமல்ஹாசன் மேற்கொண்டிருந்தார். தற்போது பிரமோஷனுக்காக கோலாலம்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய நீண்ட கால நண்பர் ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார் கமல்ஹாசன்.

 47 ஆண்டுகால நட்பு

47 ஆண்டுகால நட்பு

இவர்களது நட்பு 47 ஆண்டுகளை கடந்துள்ளது. திரைத்துறையில் இரு துருவங்களாக இருக்கும் இவர்கள் தங்களது நட்பை மட்டும் விட்டுக் கொடுக்காமல், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் உடனிருந்தார்.

புகைப்படங்களை பகிரும் ரசிகர்கள்

புகைப்படங்களை பகிரும் ரசிகர்கள்

ரஜினிக்கு பூங்கொத்தைக் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து இந்தப் புகைப்படங்களையும் கமல் -ரஜினி நட்பையும் பகிர்ந்து வருகின்றனர்.

இயல்பான ரஜினி -ஸ்டைலான கமல்

இயல்பான ரஜினி -ஸ்டைலான கமல்


இந்தப் புகைப்படங்களில் இயல்பான ரஜினியையும் ஸ்டைலான கமலையும் பார்க்க முடிகிறது. கமலின் தோளின்மீது கையைப் போட்டுக் கொண்டு நட்பு பாராட்டியுள்ளார் ரஜினி. முகத்தில் புன்னகையையும் தவழ விட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 லோகேஷ் கனகராஜ் பகிர்வு

லோகேஷ் கனகராஜ் பகிர்வு

இதேபோல இந்தப் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்களை உத்வேகப்படுத்தும் நட்பு என்றும் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் -ரஜினி சந்திப்பு

கமல் -ரஜினி சந்திப்பு

முன்னதாக கமல் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டின்போதே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. சிம்புதான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது கமல் -ரஜினி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X