மர்மயோகி..மருதநாயகம்..சபாஷ்நாயுடு படம் எப்போது வரும் ?.. கமல் சுவாரஸ்ய பதில் !
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.இதையடுத்து விக்ரம் படக்குழு இப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது.
Recommended Video
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், மர்மயோகி.. மருதநாயகம்.. சபாஷ்நாயுடு படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து சுவாரசியமான பதிலளித்துள்ளார்.

விக்ரம்
கைதி, மாஸ்டர் திரைப்படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 3ந் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என வெளியான அனைத்து மொழியிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து உள்ளது.

மருதநாயகம், சபாஷ்நாயுடு படம் வருமா ?
விக்ரம் படக்குழு விக்ரம் படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் மர்மயோகி, மருதுநாயகம், சபாஷ்நாயுடு படம் வருமா ? என கேள்வி கேட்டனர்.

காலதாமதமாகி விட்டது
இதற்கு பதிலளித்த, கமல், அந்த படங்கள் மிகுந்த காலதாமதமாகி விட்டன. எனக்கே படத்தின் அசார்தி ஏற்பட்டுவிட்டது. நான் எப்போதும் ஏதாவது புதுசு புதுசா செய்ய வேண்டும் என நினைப்பவன். அந்த படத்துடன் கூட நீண்ட நாட்கள் நான் வாழ்ந்துவிட்டேன். இதனால், அந்த படங்கள் எனக்கு பழசாக தெரிகிறது. அதிகமுறை அந்த படத்தை பார்த்துவிட்டதால் அது பழசாக தெரிகிறது. ஆனால், படத்தை எடுக்க தயாராக இருப்பவர்கள் முன்வந்தால் நிச்சயம் படங்களை எடுப்பேன். ஆனால், தனியாக சென்று மாட்டிக்கொள்ள மாட்டேன் என்றார்.

ரஜினியுடன் நடிக்க தயார்
மருதுநாயகம், சபாஷ்நாயுடு படங்கள் வெளிவராதது எனக்கு ஏமாற்றம் தான். என் திறமையை வெளி நாட்ட முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் தயார். அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜிடமும் ரஜினியிடமும் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











